Kidny

Kidny

இன்றும் ஒரு ரோஹிங்கிய முஸ்லிம்களின் படகு கவிழ்ந்தது. பலர் உயிரிழந்தனர்.


மியன்மாரில் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான  ராணுவ வேட்டை தீவிரமாகி உள்ளது அறிந்ததே .
ராணுவத்தினரின் தாக்குதலால் உயிருக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான வங்காளதேசத்திற்கு தப்பிச் சென்ற வண்ணம் உள்ளனர்.

இதுவரை சுமார் 5 லட்சம் ரோஹிங்கியா மக்கள் வங்காளதேசத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் மற்றும் ஆற்றின் வழியாக பாதுகாப்பற்ற வகையில் அளவுக்கதிகமான மக்கள் படகுகளில் செல்கின்றனர். இவர்களில் பலர் அவ்வப்போது விபத்துகளில் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், சுமார் 30 குழந்தைகள் உள்பட 65 பேர் மியான்மரில் இருந்து வங்காளதேசத்துக்கு வங்காள விரிகுடா வழியாக தப்பிச் சென்றபோது வங்காளதேசத்தில் உள்ள காக்ஸ் பஜார் மாவட்டத்தின் அருகேயுள்ள ஷா போரிர் டிவிப் கடல் பகுதியில் அந்த படகு இன்று கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்ததாக வங்காளதேச கடலோரக் காவல் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து மியான்மரில் இருந்து வங்காளதேசத்துக்கு தப்பிச் செல்ல முயற்சித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.
இன்றும் ஒரு ரோஹிங்கிய முஸ்லிம்களின் படகு கவிழ்ந்தது. பலர் உயிரிழந்தனர். இன்றும் ஒரு ரோஹிங்கிய முஸ்லிம்களின் படகு கவிழ்ந்தது. பலர் உயிரிழந்தனர். Reviewed by Madawala News on 10/16/2017 08:00:00 PM Rating: 5