Kidny

Kidny

மாடு கடத்தப்பட்ட வேன் மீது துப்பாக்கி சூடு.


சட்டவிரோதமான முறையில் மாடு ஏற்றிச் சென்ற வேன் ஒன்றை அட்டுலுகம, மாறாவ பிரதேசத்தில்
பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்து பிடித்துள்ளனர்.
மாட்டை ஏற்றிச் சென்ற வேன் பொலிஸ் சமிக்ஞையை மீறி செல்ல முற்பட்ட போது பொலிஸார் குறித்த வாகனம் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
 வேனில் இருந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். இதன்போது வேனிலிருந்து மாடொன்று, கத்தியொன்று,  ரி. 56 ரக துப்பாக்கியொன்று என்பன மீட்கப்பட்டுள்ளன.
வாகனத்தில் இருந்து மீட்கப்பட்ட நான்கு செருப்பு ஜோடிகளையும் வைத்துப் பார்க்கும் போது வேனில் நான்கு பேர் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 
சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

மாடு கடத்தப்பட்ட வேன் மீது துப்பாக்கி சூடு. மாடு கடத்தப்பட்ட வேன் மீது துப்பாக்கி சூடு. Reviewed by Madawala News on 10/18/2017 10:30:00 PM Rating: 5