Kidny

Kidny

இப்போது மியான்மார் றோஹிங்ய அகதிகளை பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டதற்கு மகிந்தவும் கோட்டாவுமே காரணம்.



மியன்மார் நாட்டுப் பிரச்சினையை அந்நாட்டிலேயே தீர்க்க இடமளிக்க வேண்டும் என்பதுடன் எமது நாட்டுப் பிரச்சினையை தீர்ப்பது குறித்தே நாம் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.


ஜாதிக ஹெல உறுமய கட்சி அலுவலகத்தில்  இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய  ராஜபக்ஷ ஆகியோர் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளதன் காரணமாக  வெளிநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி இலங்கைக்கு வருகைதரும் அகதிகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளதாக      அமைச்சர் தெரிவித்தார்.


குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட போது அதனை தாம் எதிர்த்ததாகவும் எனினும் கடந்த ஆட்சியாளர்கள்  அதனை பொருட்படுத்தவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


இதனாலேயே தற்போது மியான்மார் றோஹிஞ்சா   அகதிகளை பொறுப்பேற்க வேண்டியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.

இப்போது மியான்மார் றோஹிங்ய அகதிகளை பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டதற்கு மகிந்தவும் கோட்டாவுமே காரணம். இப்போது மியான்மார் றோஹிங்ய   அகதிகளை பொறுப்பேற்க வேண்டி ஏற்பட்டதற்கு மகிந்தவும் கோட்டாவுமே காரணம். Reviewed by Madawala News on 10/03/2017 06:25:00 PM Rating: 5