Ad Space Available here

தன் உயிரை துச்சமென மதித்து முஸ்லிம் குடும்பத்தை காப்பாற்றிய விமானப்படை வீரன் நவீன் தனுஷ்கரவிற்கு '' துணிகர இலங்கையர்'' விருது.


(ஏ.எல்.எம். சத்தார் ஏ.எச்.ஏ.ஹசைன்)

அன்று 2016 டிசம்பர் 21 ஆம் நாள் வழமைபோன்று அன்றும் சூரிய ஒளிபட்டு மட்டக்களப்பு மண் சூடேறிக் கொண்டிருந்தது. அங்குள்ள விமானப்படை முகாமில், தீயணைப்புப் பிரிவு தலைமைப் பொறுப்பில் நவீன் தனுஷ்கரத்நாயக்க கடமையாற்றிக்கொண்டிருந்தார்.

அவர் வங்கியில் தேவை ஒன்றுக்காக பகல் 1130 மணியளவில் விமானப்படை முகாமிலிருந்து வெளியேறினார். மட்டக்களப்பு நகரத்திற்குச் செல்வதற்காக குறுக்குப்பாதையொன்றின் ஊடாக மோட்டார் .

சைக்கிளைச் செலுத்தினார் சிறிதுதூரம் முன்நகர்ந்து கொண்டிருக் கையில் மட்டக்களப்பின் களப்பு கடல் அருகேயுள்ள பாதையில் சுமார் 150 பேர் அடங்கிய கூட்டத்தினர் திரண்டிருப்பதை அவதானித்தார் அந்தக் களப்பு பகுதியில் முதலைகள் இருப் பதால் முதலையொன்று கரைக்கு வந்திருக் கலாம் என்று நவீன் எண்ணிக்கொண்டார் என்றாலும் எதிரே வந்தவரிடம் சனக்கூட்டம் குறித்து வினவினார்.


வாகனம் ஒன்று களப்பில் வீழ்ந்திருப்பதாகப் பதில் வந்தது உடனே நவீன் மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே இறங்கினார். களப்பு அருகே ஒருவர் அழுது கொண்டிருப்பதைக் கண்டார். ஆனால் களப்பில் வீழ்ந்த வாகனம் நீருள் முற்றாக மூழ்கியிருக்க வேண்டும்.


அது கண்களுக்குப் புலப்பட வில்லை இந்த நிலையிலும் மூழ்கியவர்களைக் காப் பாற்றும் முயற்சியில் யாரும் களப்பில் கால்ப தித்ததாகத் தெரியவில்லை. பதிலாக பலர் தம் கைப்பேசிகள் மூலம் அந்தக் காட்சியை பதிவு செய்வதிலேயே முனைப்புடன் ஈடுபட்டுக் கொண்டிருப்பதைத்தான் கண்டுகொண்டார் நீருள் மூழ்கினால் சுவாசிப்பதில் படக் கூடிய வேதனை குறித்து ஒரு கணம் எண் ணிப்பார்த்தார் மூழ்கியுள்ள வாகனத்திற்குள் சிக்கியிருப்போர் எவ்வாறெல்லாம் அவஸ்தைக்குள்ளாகி மரணப்போராட்டம் நடத்திக் கொண்டிருப்பர்? என்ற சிந்தனை அவர் மனதில் அலை மோதியது


மறுகணம் தன் எண்ணம், ஆசாபாசங்களை யெல்லாம ஒருபுறம் தள்ளினார். செயலில் இறங்கினார் தன் உள்ளாடைகள் மட்டுமிருக்க மேல் சட்டை, காற்சட்டைகளைக் களைந்தார் இவர் களப்பில் குதிக்கத் தயாராவதைக் கண்ட ஒருவர் நீங்கள் நேவியா? என்ற கேள்வியைத் தொடுத்தார் இல்லை நான் எயார் போஸ் விமானப்படை என்று பதிலளித்தவாறு களப்பு மேலிருந்த பாலத்தை நாடிச் சென்றார்.

களத்தின் குறித்த இடத்தில் கற்பாறைகள் இருக்குமோ   அல்லது முட்கம்பி, கம்புத்தடிகள் இருக்குமோ? என்று கூட சிந்திக்கவில்லை இவற்றுக்கு மேலாக மனிதர்களை இரையாகக் கொள்ளும் பயங்கர முதலைகள் குறித்தும் பீதி கொள்ளவில்லை.

பிற உயிரைக் காப்பாற்றுவ தற்காக தன்னுயிரைப் பணயம் வைத்து களப் பினுள் குதித்தார் அங்கு சுமார் 15 அடி ஆழமான இடத்தில் வாகனத் தேடலை ஆரம்பித்தார், பகீரதப் பிரயத் தனத்துடன் கீழ் மட்டம் வரை சென்று கால் களால் துழாவினார். அப்போது தன் பாதத்தில் ஏதோவொன்று தட்டுப்படுவதை உணர்ந்தார் அது முச்சக்கர வண்டியின் கூரை விரிப்பு என்ப தையும் புரிந்து கொண்டார்.


சிரமத்துடன் மேலே மீண்டு சுவாசத்தை சீர்செய்து கொண்டார் மீண்டும் அதேஇடத்தில் மூழ்கி தரை மட்டம் வரை செல்ல முயன்றார். கலங்கிய சேற்றில் எல்லாமே கருநிறமாகவே காட்சி தந்தன. கண்கள் எரிச்சலூட் டின கண்களை மூடியவாறு குருடன் துழாவுவது போல் விரல்களால் தொட்டுப் பார்த்தார். சந்தேக மில்லை. அதுவொரு முச்சக்கர வண்டிதான் என்பதை உறுதி செய்து கொண்டார் மூச்செடுக்க முடியாத சிரமம். கண்திறக்க முடியாத எரிச்சல் எல்லாத் தொல்லைகளையும் தாங்கிய வாறான தேடலில் சிறு கையொன்றைத் தொட்டு ணர்ந்தார் சந்தேகமில்லை. ஓர் உயிர்தான் என்று முழு உடலையும் அடையாளம் கண்டு கொண்டார் தன் ஒரு கையால் பற்றிப் பிடித்தவாறு மறுகையை நீச்சல் துடுப்பாக்கிக் கொண்டு நீரின் மேலே வந்தார் இப்போதும் வேடிக்கை என்னவென்றால் உயிர் காக்கும் இப்போராட்டத்தை பலரும் தம் கைபேசி களால் படம்பிடித்து வேடிக்கை நடத்தினார்களேயன்றி யாரும் உதவிக்கு வரவில்லை.


 கரையேறுவதற்கு இன்னும் இருக்க 7-8 மீட்டர் அளவு தூரம் நவீன்தான் மீட்டெடுத்த சிறுமியின் உடலை தன்னந்தனியாக சுமந்தவாறு கரைக்கு வந்தார். அச்சிறுமியை தரையில் வைத்து விட்டு மூழ் கியுள்ள ஏனையோரை மீட்கும் துணிவில் மீண்டும் குதித்த அதே பகுதியில் இறங்கி  மீண்டும் தட்டுத் தடுமாறியும் தொட்டுப் பார்த்த போது பெரிய கையொன்றைக் கண்டு கொண்டார்.

அள்ளி அணைத்தவாறு முன்பு மேற்கொண்ட பிரயத்தனத்தையும் விட பன்மடங்கு சிரமத்துடன் அவ்வுடலையும் மீட்டெடுத்தார். அது வொரு பெண். 60 வயதுடைய கச்சி உம்மா என பின்னர் இனம் காணப்பட்டார்.

 அப்போதும் கூட அவர் முயற்சிக்கு எவரும் உறுதுணைக்கு வரவில்லை நவீன் மனம் தளரவில்லை தனியாக இரண்டு ஜீவன்களை மீட்டெடுத்ததால் பெரும் களைப்புக்கு இலக்கானார் சேற்றில் துவண்ட கண்கள் எரிவு, களப்புநீர் தானாக தொண்டைக்குள் இறங்கிய தொல்லை. கை, கால் உளைச்சல் இத்தியாதி வேதனைகளுக்கு மத்தியில் சற்று
 களைப்பாறினார் அப்போது "இன்னும் ஒருவர் இருக்கு அவரை மீட்டெடுத்தால் சரி." என்ற கூப் பாடு இவர் செவியில் ஊடுருவியது.


சில வினாடி ஓய்வின் பின் மனம் தூண்டவே மீண்டும் களப்பில் குதித்தார். எஞ்சியுள்ள அடுத்த உயிரையும் மீட்டெடுக்கும் செயலில் இறங்கினார் முன்னரைப் போன்று அந்த மூன்றாமவரின் உடலை அவரால் இலகுவில் தேடிப்பிடிக்க முடியவில்லை. மிகவும் நீண்ட முயற்சியின் பின்னர் பெண்ணொருவரின் தலையைக் கண்டுபிடித்து உடலை இழுத்தெடுக்கும் முயற்சியில் தோல்விகண்டார் நீண்ட நேரம் நீருக்குள் தரிந்திருந்ததால் மூச்செ டுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டார் அந்த நிலையிலும் அவ்வுடலை ஆராய்ந்த போது அப்பெண்ணின் கால் ஒன்று முச்சக்கர வண்டியின் இரும்புக் குழாய் ஒன்றில் சிக்கியிருப்பதைக் கண்டார்.


இனியும் உள்ளே இருக்க இயலாத நிலையில் மேலே வந்து சுவாசிப்பதை சீராக்கிக் கொண்டார். தன்னால் மாத்திரம் முடியாது யாரும் உதவிக்கு வாருங்கள் என்று நவீன் கூக்குரலிட்டார். நீரில் இறங்கப் பயம் என்றால் கரையில் இருந்தாவது உதவிக்கு வாருங்கள் என்று கெஞ்சினார்.
ஆனால் யாரும் அசைய வில்லை.

மீண்டும் உள்ளே சென்று தேடுவதில் சிரமங்களை எதிர்கொண்டார் உடற்பருமனான பெண் என்பதால் கஷ்டப் பட்டு கரைசேர்த்தார் பெண்ணின் மூடிய வாயைத் திறந்து பக்கவாட்டில் சாய்த்தார் அப்போது நீர் வெளியேறியது நெஞ்சுப் பகுதியை அழுத்திய வாறு மேலும் நீரை வெளியேற்றி நாடி பிடித்துப் பார்த்தபோது இரத்த ஓட்டம் நிகழ்வதை உணர்ந்தார் உயிர் இருக்கிறது.

அவசர மாக வைத்தியசாலக்கு எடுத்துச் செல் லுங்கள் என்று கூச்சலிட்டார் அங்கிருந்தவர்கள் அப் பெண்ணை முச்சக்கர வண்டியில் ஏற்றினர் ஏற் கனவே கரைசேர்க்கப்பட்ட இருவ ரையும் யாரோ வைத்தியசாலைக்குக் கொண்டு போயுள்ளதை நவீன் தெரிந்து கொண்டார் இந்த சந்தர்ப்பத்திலும் நவீன் தான் வண்டியில் ஏறி மட்டக்களப்பு வைத்தி யசாலைக்குச் சென்றார்.


அப்போதும் அவர்தான் உள் காற்சட்டையுடன் மாத் திரம் இருப்பதையும் பொருட்படுத்தாது உயிர் காப்பதிலே கண்ணாக இருந் துள்ளார் நீருள் மூழ்கியவர்களை விடவும் அவர்களைக் காப்பாற்றிய இந்த விமானப்படை வீரர் இருக்கும் தோற் றத்தைப் பார்த்து வைத்தியசாலை வட்டாரமே பெரும் திகைப்புக்குள்ளாகியது அப்போதுதான் தான் இருக்கும் நிலையை நவீன் உணர்த்தார். இந்த இலட்சணத்துடன் எப்படி முகா முக்குச் செல்வது என்ற கவலை அவரை ஆட் கொண்டது.


அப்போது வைத்தியசாலை நிருவாகத்தால் அணிந்து கொள்வதற்காக ஒரு துவாய் கொடுக்கப் பட்டது. அதனை இடுப்பைச் சுற்றிக் கட்டிக்கொண்டு வைத்தியசாலையிலிருந்து வெளியே வந்தார் களப்பில் மூழ்கியவர்களை விமானப் படையைச் சேர்ந்த ஒருவரே காப்பாற்றியுள்ளார் என்ற செய்தி அப்போதுநகரெங்கும் பரவியிருந்தது.


ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கே. கபீர், அவரது மனைவி மாமி, மனைவியின் தங்கை, ஆறு வயது மகன், மூன்று வயது மகள் ஆகியோர் மட்டக்களப்பு
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் தம் உற வினர் ஒருவரைப் பார்வையிடுவதற்காக முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தனர். தந்தை கபீர், முச்சக்கர வண்டியைச் செலுத்திக் கொண்டி ருந்தார்.


திடீரென வண்டி அவரது கட்டுப்பாட்டை மீறி களப்பினுள் பாய்ந்தது. அப்போது சாரதி கபீரும் னைவியின் தங்கையும் வண்டியிலிருந்து உயிர்தப்பினர். ஏனையோருடன் முச்சக் கரவண்டிகளப்பில் மூழ்கியது. மூன்று வயது மகள் அன்பா, ஆறு வயது மகன் ஹஸன், ஏ.ஸிஸரீனா, கச்சி உம்மா ஆகியோரே விபத்துக்குள்ளான வண் டியில் சிக்கிக் கொண்டனர். இவர்கள் சில நிமிடங்கள் நீருள் மூழ்கி உயிர்பிரியும் இறுதிக் கட்டத்தில் இருந்த போதே விமானப்படை வீரர் நவீனின் பகீரதப் பிரயத் தனத்தால் கரை சேர்க்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் அன்பா, ஹஸன், கச்சி உம்மா ஆகியோர் உயிர் பிழைத்தனர்.

ஆனால் இறுதியாக கரையேற்றப்பட்ட அப்துல் காதர் உம்மு சரீனா (வயது 34) மட்டக்க எாப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மூன்றாவது நாள் உயிர்துறந்தார்.


 வத்தளையைப் பிறப்பிடமாகக் கொண்ட நவீன் தனுஷ்க படிக்கும் சிறுபிராயத்திலிருந்தே நீச்சலில் அலாதியான திறமை காட்டி வந்தார் 9 ஆம், ஆண்டாகும் போது நீச்சல் போட்டிகளில் போற்றத்தக்க கெட்டிக்காரனாக விளங்கினார். 2013 -2014 காலப்பகுதிகளில் விமானப்படைநடாத்திய நீச்சல் போட்டிகளில் தங்கப்பதக்கங்கள், வெண்கலப் பதக்கங்கள் என்றெல்லாம் வென்றெடுத்து தனைகள் பல நிலைநாட்டினார்இன்று முழு இலங்கை மக்களுக்குமே பெருமைப்பட்டுக் கொள்ளும் வகையில் தெரண ஊடக வலையமைப்பினால் 2017 ஆம் ஆண்டின் துணிகர இலங்கையர் விருது வென்று சாதனை படைத்துள்ளார் தன்னலமற்ற, இன மத பேதமற்ற நவீனின் வீரச் செயலுக்காக நாமும் அவரைப் பாராட்டுவோம் வாழ்த்துவோம்"எந்த சந்தர்ப்பத்திலும் என் உதவி வந்து சேரும் என்று அல்லாஹ் வாக்களித்தி ருப்பதற்குச் சிறந்த சான்று வாவிக்குள் மூழ்கிய எனது குடும்பத்தினரைக் காப் பற்ற விமானப்படை வீரர் ஒருவரை அல்லாஹ் அனுப்பி வைத்த மெய் சிலிர்க்கும் விடயத்தைக் கூறலாம்" என்று மட்டக்க ளப்பு வாவிக்குள் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட் டவர்களின் தந்தையான ஏறாவூர் மிச் நகரைச் சேர்ந்த அபூபக்கர் அப்துல் காதர் தெரி வித்தார்.


கடந்த வருடம் டிசம்பெர் 21ஆம் திகதி யன்று இவரது மனைவி காஸிமா  உம்மா (வயது 60) மகள் உம்மு சரீனா (வயது 34), மற்றும் பேரப் பிள் ளைகளான அன்பா (வயது 2) மஹ்தி ஹஸன் (வயது 4) ஆகியோர் விமானப்படை வீரர் நவின் தனுஷ்க பண்டார என்ப வரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் குறித்து அவர் நினைவு கூர்ந்தார்.


அதுபற்றி மேலும் தெரிவித்த அவர், " அன்றைய தினம் அந்த விமானப்படை வீரர் தக்க தருணத்தில் அங்கு வந்தி ருக்கவில்லை என்றால் அங்கு வாவிக்குள் மூழ்கிய எவரையும் காப்பற்ற முடியாமல் போயி ருக்கும். அவரை சிறந்த ஒரு மனிதாபிமானம் உள்ள மனி தனாக மதித்து நாங்கள் அவ ருக்கும் அவரது குடும்பத்தின ருக்கும் எமது இதயத்திலிருந்து நன்றியறிதல்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என்றார்.
தன் உயிரை துச்சமென மதித்து முஸ்லிம் குடும்பத்தை காப்பாற்றிய விமானப்படை வீரன் நவீன் தனுஷ்கரவிற்கு '' துணிகர இலங்கையர்'' விருது. தன் உயிரை துச்சமென மதித்து முஸ்லிம் குடும்பத்தை காப்பாற்றிய விமானப்படை வீரன் நவீன் தனுஷ்கரவிற்கு '' துணிகர இலங்கையர்'' விருது. Reviewed by Madawala News on 10/08/2017 05:29:00 PM Rating: 5