Ad Space avaiable

11600 லீட்டர் டீசல் ரயிலின் பிரேக் செயலிழந்தது. பாரிய விபத்து தடுக்கபட்டது. #நாவலப்பிட்டி.


நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை எரிபொருள் சேமிப்பு நிலையத்திற்கு எரிபொருள் ஏற்றிவந்த ரயில் ஹட்டன் ரயில் நிலையத்திற்கருகில் திடீரென தடை (பிரேக்) இயங்காத நிலையில் பின் நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இன்று (10) அதிகாலை 3 மணியளவிலே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

11600 லீட்டர் டீசல் ஏற்றி வந்த குறித்த ரயில் ஹட்டன் ரயில் நிலையத்தை கடந்து சில நிமிடங்களில் திடீரென பின் நோக்கி வந்துள்ளது உடனடியாக ரயில் அதிகாரிகள் பாதுகாப்பு பெட்டியிலிருந்த தடையினூடாக ( (ஹேன் பிரேக்) நிறுத்தி பாரிய விபத்தை தடுத்துள்ளனர்.

ரயிலின் பிரேக்கை  இயங்குவதற்கான காற்றை வழங்கும் குழாய் வெடித்ததாலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

இச் சம்பவத்தில் யாருக்கும் எவ்வித பதிப்புகளும் இல்லை என்றும் திருத்தப்பபணிகள் இடம்பெற்று வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்
11600 லீட்டர் டீசல் ரயிலின் பிரேக் செயலிழந்தது. பாரிய விபத்து தடுக்கபட்டது. #நாவலப்பிட்டி. 11600 லீட்டர் டீசல் ரயிலின் பிரேக் செயலிழந்தது. பாரிய விபத்து தடுக்கபட்டது. #நாவலப்பிட்டி. Reviewed by Madawala News on 10/10/2017 08:49:00 AM Rating: 5