Kidny

Kidny

மாடு திருடர்களுடன் சேர்ந்து, மதுபான விருந்தில் பொலிஸ் அத்தியட்சகர்.


(எம்.எப்.எம்.பசிர்)

வடக்கின் பொலிஸ் நிலையம் ஒன்றின் சிறப்பு பொலிஸ் குழுவொன்று, மாடு திருடிய திருடர்கள் சிலரைக் கைது செய்ய சென்ற
போது, அந்த சந்தேக நபர்கள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருடன் மது விருந்தில் இருந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கைது நடவடிக்கைக்கு சென்ற பொலிஸ் குழு உயர் அதிகாரிகளிடம் செய்த முறைப் பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

வடக்கில் மாடு திருட்டுக்கள் இடம் பெறும் நிலையில், அது தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை செய்துள்ளனர்.

இந் நிலையில் அந்த விசார ணைகளில் சந்தேக நபர்கள் சிலரை அடை யாளம் கண்டுள்ள பொலிஸார் அவர்களைக் கைது செய்ய சென்ற போதே இவ்வாறு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவருடன் அவர்கள் மதுவிருந்தில் இருந்ததை அவதா னித்துள்ளனர்.


மது விருந்தின் பின்னர், குறித்த சந்தேக நபர்களை அந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் தனது வாகனத்திலேயே அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ள நிலையில், கைது நடவடிக்கைக்கு சென்ற பொலிஸார் அது தொடர்பில் மேலதிகாரிகளுக்கு அறி வித்துள்ளனர்.

இந் நிலையிலேயே அது தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மாடு திருடர்களுடன் சேர்ந்து, மதுபான விருந்தில் பொலிஸ் அத்தியட்சகர். மாடு திருடர்களுடன் சேர்ந்து, மதுபான விருந்தில் பொலிஸ் அத்தியட்சகர். Reviewed by Madawala News on 10/25/2017 11:26:00 AM Rating: 5