Kidny

Kidny

நாடியின் கீழால் வாய்க்குள் நுழைந்த கம்பியுடன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நபர்.


கட்டிட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவரின் நாடியைத் துழைத்துச் சென்ற கம்பியொன்றை ஹோமாகம வைத்தியசாலை வைத்தியர்கள் குழு சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலாவது மாடியிலிருந்து கீழ் மாடிக்கு இறங்கும் போது குறித்த ஊழியர் கால் தவறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளார். பின்னர் அயலவர்கள் நாடியின் கீழால் வாய்க்குள் நுழைந்த கம்பியுடன் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வைத்தியசாலையில் சுமார் ஒன்றரை மணி நேர சத்திர சிகிச்சையின் பின்னர் விசேட வைத்திய நிபுணர்கள் குழு விபத்துக்குள்ளானவரின் வாயில் ஏறியிருந்த கம்பியை அகற்றியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.  

நாடியின் கீழால் வாய்க்குள் நுழைந்த கம்பியுடன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நபர். நாடியின் கீழால் வாய்க்குள் நுழைந்த கம்பியுடன் வைத்தியசாலைக்கு அழைத்து வரப்பட்ட நபர். Reviewed by Madawala News on 10/10/2017 10:15:00 PM Rating: 5