Kidny

Kidny

வகுப்புக்கு சென்ற சிறுமியை வல்லுறவுக்கு உற்படுத்த முயற்சித்த விகாராதிபதி தேரருக்கு எதிராக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம்.


 கம்பளை குருந்துவத்தை பிரதேசத்தில் சமய வகுப்பிற்குச் சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயற்சித்ததாக கூறுப்படும்
விகாராதிபதிக்கு எதிராக நேற்று பகல் குருந்துவத்தை நகரில் பிரதேசவாசிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக் கப்பட்டது .

கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற் குட்பட்ட விகாரையின் விகாராதிபதி சமய வகுப்பிற்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அரச மரத்திற்கு பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயற்சி த்ததாக கூறப்டும் சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டார்.

கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட குறித்த பிக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் ஊர்மக்கள் இணைந்து குறித்த விகாரையை பூட்டியிருந்த நிலையில் பிணையில் விடுதலையாகி வந்த குறித்த பிக்கு மீண்டும் விகாரைக்கு வந்து பூட்டை உடைத்து விகாரைக்குள் சென் றுள்ளார்.

 இதன் போது ஒன்றுகூடிய ஊர்மக்கள் உட னடியாக பிக்கு வெளியேற வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து குருந்துவத்தை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து பிக்குவை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

வகுப்புக்கு சென்ற சிறுமியை வல்லுறவுக்கு உற்படுத்த முயற்சித்த விகாராதிபதி தேரருக்கு எதிராக பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டம். வகுப்புக்கு சென்ற சிறுமியை வல்லுறவுக்கு உற்படுத்த முயற்சித்த விகாராதிபதி தேரருக்கு எதிராக பிரதேசவாசிகள்  ஆர்ப்பாட்டம். Reviewed by Madawala News on 10/19/2017 12:40:00 PM Rating: 5