Kidny

Kidny

கத்தோலிக்க பாதிரியார் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி.


கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி காவத்தை பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணி பிரச்சினை காரணமாகவே ஆலய பங்குத் தந்தையான அருட்திரு சாள்ஸ் டிகோல் என்பவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பகுதியில் உள்ள புனித அன்னமாள் ஆலயத்திற்கு சொந்தமான காணியை அத்துமீறி கைப்பற்ற முயற்சித்தவரே இவ்வாறு பாதிரியாரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, படுகாயமடைந்த ஆலய பங்குத் தந்தை தொடர்ந்தும் காவத்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
கத்தோலிக்க பாதிரியார் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி. கத்தோலிக்க பாதிரியார் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி. Reviewed by Madawala News on 10/17/2017 08:21:00 AM Rating: 5