Yahya

கொழும்பு மாவட்ட மஸ்ஜித் பெரடேசனின் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம்.


குறித்த கூட்டத்தை மிகவும் சிறப்பான முறையில் புறக்கோட்டை மஸ்ஜித் பெரடேசன் தலைவர் இஸ்மத் ஹாஜி, கொழும்பு மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவர் அஸ்ஷேக் கே.எம்.முக்ஸ்சித் அகமட், கொழும்பு வடக்கு மஸ்ஜித் பெரடேசன் செயலாளர் எம்.எம்..எம்.மின்ஹாஜ், புதுக்கடை மஸ்ஜித் பெரடேசன் பொருளாளர் எஸ்.எ.அப்துல் கரீம்,கொம்பனித்தெரு மஸ்ஜித் பெரடேசன் பொருளாளர் என்.எம்.தாஜுதீன் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

குறித்த கூட்டத்தில் தலைவர் அஸ்லம் ஒத்மானின் உரையைத் தொடர்ந்து  வருடாந்த அறிக்கையை செயலாளர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் வாசித்தார்.,

கடந்த மூன்று வருடத்திற்கான கணக்கறிகையை பொருளாளர் சபையில் சமர்ப்பித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டுக்கான நிருவாக உறுபினர்களின் அனைத்து பதவிகளும் உத்தியோகபூர்வமாக கலைக்கப்பட்டது.

கொழும்பு மாவட்டத்தில் சுமார் 182 பளிவசல்களை உள்ளடக்கிய 12 சம்மேளனத்தின் உறுப்பினர்களால் கொழும்பு மாவட்டத்திற்கான புதிய நிருவாக சபை ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டது.அதன் அடிப்படையில் இம்முறையும் இரண்டாவது தடவையும் தலைவராக சம்மேளனத்தின் ஆரம்ப கர்த்தா அல்ஹாஜ் அஸ்லம் ஒத்மான் தெரிவு செய்யப்பட்டார்.

அதே போல் இரண்டாவது தடவையாக பொதுச்செயலாளராக சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் சம்மேளன உறுபினர்களால் எந்தவித போட்டியுமின்றி தெரிவு செய்யப்பட்டார்.

உதவித் தலைவர்களாக எஸ்.எம்.இஸ்மத், எல்.வை.எம்.ஹாஜி ஹனிப், எஸ்.எச்.எம்.ஹன்சார், எம்.பி.எஸ்.முகமட் தெரிவு செய்யப்பட்டதுடன் உதவி செயலாளர்களாக எஸ்.எ.அப்துல் கரீம், எம்.எம்.எம்.மின்ஹாஜ், பிரச்சார செயலாளர்களாக எம்.பிர்தௌஸ், என்.எம்.தாஜுதீன், பொருளாராக எம்.ராசிக், உதவிப் பொருளாராக எம்.எம்.றிகாஸ், சரியா ஆலோசகர்களாக அஸ்ஷேக் கே.எம்.முஸ்சிக் அகமட், அஸ்சேக் சியாம், திட்டமிடல் ஆலோசகராக சாபிர் எம் ஹாசீம், உள்கணக்காய்வாளராக எம்.இர்ஹான் தெரிவு செய்யப்பட்டார்.

கொலன்னாவை நிருபர் - டி.கே.எம்.றிஸ்வி


கொழும்பு மாவட்ட மஸ்ஜித் பெரடேசனின் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம். கொழும்பு மாவட்ட மஸ்ஜித் பெரடேசனின் இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம். Reviewed by Madawala News on 10/07/2017 09:18:00 AM Rating: 5