Kidny

Kidny

தசுன் நிஷான் தற்கொலை பின்னணியில் ப்ளுவேல் Game. சிங்கள ஊடகங்கள் தகவல்.


அண்மையில் தற்கொலை செய்த கொண்ட இலங்கை நடிகர் தசுன் நிஷான் தொடர்பாக முன்னணி சிங்கள ஊடகங்கள் செய்தி ஒன்றை வெளியிட்டு வருகின்றது.

அதன்படி  நடிகர் தசுன் உயிரிழப்பதற்கு முன்னர் உலக புகழ்பெற்ற ஆபத்தான ப்ளுவேல் விளையாட்டினை விளையாடியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதில் மக்கள் தற்கொலை செய்து கொள்ளும் முறை, தற்கொலை செய்து கொள்ளும் விதங்களை அவர் தொடர்ந்து இணையத்தளங்களில் பார்வையிட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதனை பார்வையிட்டதன் ஊடாக அவரது மனநிலை மேலும் மாற்றமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த தசுன் மதுபாவனைக்கு அடிமையானதாக தெரிய வருகிறது.

உயிரிழப்பதற்கு முன்னர் தசுன் இறுதியாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவும் அவரது மனநிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகங்கள் தகவல்  வெளியிட்டுள்ளது.
தசுன் நிஷான் தற்கொலை பின்னணியில் ப்ளுவேல் Game. சிங்கள ஊடகங்கள் தகவல். தசுன் நிஷான் தற்கொலை பின்னணியில் ப்ளுவேல் Game. சிங்கள ஊடகங்கள் தகவல். Reviewed by Madawala News on 10/03/2017 09:27:00 AM Rating: 5