Kidny

Kidny

சிறு முறுகல் ஏற்பட்ட கம்பளை விவகாரம்.. பதட்டமும் வேண்டாம்.. பரப்பவும் வேண்டாம்.

இன்று மாலை கம்பளை போதளப்பிடிய பகுதியில் அப்பிரதேச விகாரையின் பெரஹர செல்லும் போது கல் வீசி தாக்கியதாக
அங்கு சிறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.


பின்னர் உடனடியாக அங்கு விஜயம் செய்த  கம்பளை பிராந்திய பொலிஸ் உயர் அதிகாரி  விரைந்து வந்து சம்பவத்தைக் கேட்டறிந்து அப்பிரதேச பெரும்பான்மையினருக்கு தெளிவுபடுத்தினார். எனினும் பெரும்பான்மை இனத்தவரில் சிலர் கடும்போக்காகவே நடந்து கொண்டனர்.

பின்னர் அருகிலுள்ள விகாரையில்  பெரும்பான்மையினர் ஒன்றுகூட  நிலமை பெரிதாகி விடமல் தடுப்பதற்கு குறித்த பொலிஸ் உயர் அதிகாரியுடன் பள்ளிவாசல் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் விகாரைக்கு நேரடியாக சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

தற்போது அங்கு பதற்றம் எதுவும் இல்லையெனினும் கடும்போக்குவாத குழுவினர் சிலர் ஆங்காங்கே ஒன்றுகூடி நிற்பதால் அப்பகுதியில் முஸ்லிம்கள் நடமாடுவதையும், ஒன்றுகூடி நிற்பதையும் தவிர்ந்து கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.

இத்தனைக்கும் நடந்த சம்பவம் இதுதான்..

குறித்த பெரஹர  சென்ற வழியில் ஒரு மத்ரஸா இருக்கிறது. மத்ரஸாவில் கட்டட வேலைப்பாடுகளும் நடந்த வண்ணமிருக்கிறது.

பெரஹரா செல்வதை கண்ட மத்ரஸா மாணாவர்கள் சிலர் ஓடிவந்து மாடியில் இருந்து வெளியே எட்டிப்பார்க்கும்போது காலில் தவறுதலாக தட்டுப்பட்ட சிறு கல் அல்லது பலகையொன்று கீழே  விழுந்திருக்கிறது.

பெரஹர சென்ற ஒருவரின் மீது அது பட்டதால் பள்ளியினுள்ளே இருந்து கற்களால் எறிகிறார்கள் என்று திரிவுபடுத்தப்பட்டு பதற்றநிலை ஒன்று உருவாகும் வரை சென்றுள்ளது.

நடந்ததை விளக்கி சொல்லியும் அவர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைப்பாட்டில் இருக்கவில்லை.பின்னர் குறித்த சில மாணவ சிறுவர்களையும் அழைத்து சென்று வாக்குமூலம் பெறப்பட்டது.

தற்போது பெரும் பதற்றம் எதுவும் அங்கில்லை எனினும் முஸ்லிம்கள் விழிப்பாகவும், மிகப்பொறுமையாக நிதானமாக நடந்துகொள்வதே நல்லது.

குறிப்பு:
இன்னும் தெளிவான மற்றும் பிந்திய நிலவரம் தொடர்பில் அவதானித்து வருகிறோம்.கிடைத்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். சம்பவம் தொடர்பில் அறிந்தவர்கள் comment இல் தெரிவிக்கலாம்.

-அல்மஷூறா / மடவளை நியூஸ்
சிறு முறுகல் ஏற்பட்ட கம்பளை விவகாரம்.. பதட்டமும் வேண்டாம்.. பரப்பவும் வேண்டாம். சிறு முறுகல் ஏற்பட்ட கம்பளை விவகாரம்.. பதட்டமும் வேண்டாம்.. பரப்பவும் வேண்டாம். Reviewed by Madawala News on 10/19/2017 10:52:00 PM Rating: 5