Kidny

Kidny

கண்டி - கொழும்பு அதிவேகப் பாதை தொடர்பில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரை தூக்கி உள்ளே போட்ட போலிஸ் . ( சூழல் ஆர்வலர் விரட்டியடிப்பு)


கண்டி அதிவேகப் பாதை நிர்மாண செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரை பொலிஸார் கைது செய்து தடுப்புக் கூண்டில் அடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. https://goo.gl/qJxTLQ

கண்டி அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளின் போது எதிர்ப்படும் கற்பாறைகளை வெடிவைத்து தகர்ப்பது தொடர்பான பரீட்சார்த்த முயற்சிகள் தற்போது குருநாகல் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.


இதன் காரணமாக ஏராளம் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமகன் ஒருவர் சூழல் பாதுகாப்பு ஆர்வலர் ஒருவரையும் அழைத்துக் கொண்டு பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றுள்ளார்.

எனினும், அவரது முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளாத பொலிஸார் குறித்த நபரை கைது செய்து தடுப்புக் கூண்டில் அடைத்துள்ளனர்.


அவருடன் வந்த சூழலியல் ஆர்வலரை தகாத வார்த்தைகளினால் திட்டி விரட்டியுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தரப்பினர் பொலிஸ் அவசர இலக்கத்தினூடாக பொலிஸ் தலைமையகத்துக்கு முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.


கண்டி - கொழும்பு அதிவேகப் பாதை தொடர்பில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரை தூக்கி உள்ளே போட்ட போலிஸ் . ( சூழல் ஆர்வலர் விரட்டியடிப்பு) கண்டி - கொழும்பு  அதிவேகப் பாதை தொடர்பில் முறைப்பாடு செய்யச் சென்ற நபரை தூக்கி உள்ளே போட்ட போலிஸ் . ( சூழல் ஆர்வலர் விரட்டியடிப்பு) Reviewed by Madawala News on 10/31/2017 06:54:00 AM Rating: 5