Kidny

Kidny

பெற்றோர் வீடு வரத் தாமதமானதால், வீட்டுக்கு தீவைத்த மகன். தீயணைப்புப் படையினர் அழைக்கபட்டு தீயணைப்பு. #பேருவளை (காலவில)


வெளியூருக்கு பயணம் செய்த பெற்றோர் வீடு வரத் தாமதமானதால் ஆத்திரமடைந்த மகன் வீட்டுக்கு தீவைத்துள்ளார்.
இச்சம்பவமொன்று பேருவளை காலவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெற்றோர் வீடு திரும்ப தாமதமானதால் கோபமடைந்த இவர் வீட்டுக்கு தீமூட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவதினம் இவரின் பெற்றோர் வெளியில் பயணமொன்று சென்று, அவசரமாக திரும்புவதாக மகனிடம் கூறியுள்ளார்.

பெற்றோர் வீடு திரும்புவது தாமதமானதால் கோபமடைந்து,
வீட்டிலிருந்த கடதாசிகளை சேர்த்து
வீட்டுக்கு தீமூட்டியுள்ளதாக விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக அளுத்கம பொலிஸாருக்கு தகவல் வழங்கப்
பட்டதையடுத்து களுத்துறை தீயணைப்புப் படையினர் அழைக்கப் பட்டு தீ அணைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸார் விசாரணை நடத்திய போது, இளைஞன் ஓரளவு  மனநலம் பாதிக்கப்பட்டர் என தெரிய வருகிறது.  பெற்றோருக்கும் போலீசார்  கடுமையாக எச்சரித்ததாக அறிய வருகிறது.

பெற்றோர் வீடு வரத் தாமதமானதால், வீட்டுக்கு தீவைத்த மகன். தீயணைப்புப் படையினர் அழைக்கபட்டு தீயணைப்பு. #பேருவளை (காலவில) பெற்றோர் வீடு வரத் தாமதமானதால், வீட்டுக்கு தீவைத்த மகன்.  தீயணைப்புப் படையினர் அழைக்கபட்டு தீயணைப்பு. #பேருவளை (காலவில) Reviewed by Madawala News on 10/23/2017 09:00:00 AM Rating: 5