Ad Space avaiable

I A M அமைப்பின் கலிபோர்னிய மாநாட்டில் கலந்து கொள்ள முதல் இலங்கை முஸ்லிமாக எம்.எஸ்.அபுல் ஹக்கம் றமீஸ் அமேரிக்கா பயணம்.



International Association Of  Movers -USA யினால் வருடாந்தம் நடாத்தப்படும் 55வது வருட மாநாட்டில் கலந்து கொள்ள இலங்கையை சேர்ந்த றமீஸ் ஷம்சுதீன் அமெரிக்கா பயணம்.....

இன்டெர்நெசனல் அசோசியேசன் ஒப் மூவர்ஸ் அமைப்பின் 55வது வருடாந்த ஒன்றுகூடல் இவ்வருடம் அமெரிக்காவின்
Long Beach Convention & Entertainment Center, Long Beach, California, USA இல் இடம்பெறவுள்ளது,

இதில் 175 நாடுகளில் இருந்து 2000 கம்பெனிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்

இந்நிகழ்வில் கட்டார் நாட்டின் பிரபல நிறுவனமான Ability Logistics & Transport W.L.L நிறுவனத்தின் பொது முகாமையாளர் எம்.எஸ்.அபுல் ஹக்கம் றமீஸ் அவர்களும் கலந்துகொள்ளவுள்ளார்.

இம் மகா நாட்டில் கலந்து கொள்ள கட்டாரில் இருந்து செல்லும் 4 பேரில் ஒருவரும் இம் மாநாட்டில் கலந்து கொள்ளும் முதல் இலங்கை முஸ்லிமும் இவராவார்

இவ்வாறு கலந்து கொள்ளும் றமீஸ் ஷம்சுதீன் சாய்ந்தமருதின் பிரபல ஆலிம்களுல் ஒருவரான மர்ஹூம் அல்ஹாஜ் மௌலவி ஏ.எஸ்,எம்.சம்சுத்தீன் (பஹ்ஜி, மதனி)(SLEAS) ஓய்வுபெற்ற பிரதி கல்விப்பணிப்பாளர் மற்றும் மர்ஹூம் ஐ.எல்.என்.சுபைதா ஆகியோரின் கணிஷ்ட புதல்வருமாவார்.
I A M அமைப்பின் கலிபோர்னிய மாநாட்டில் கலந்து கொள்ள முதல் இலங்கை முஸ்லிமாக எம்.எஸ்.அபுல் ஹக்கம் றமீஸ் அமேரிக்கா பயணம். I A M அமைப்பின் கலிபோர்னிய மாநாட்டில் கலந்து கொள்ள முதல் இலங்கை முஸ்லிமாக எம்.எஸ்.அபுல் ஹக்கம் றமீஸ் அமேரிக்கா பயணம். Reviewed by Madawala News on 10/08/2017 09:02:00 PM Rating: 5