Kidny

Kidny

நாடளாவிய ரீதியில் வீட்டு வருமானம் மற்றும் செலவுகளின் விபரம் வெளியிடப்பட்டது.


வீட்டு வருமானம் குறைந்த மாகாணமாக கிழக்கு மாகாணம் உள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவிபரத்
திணைக்களம் வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் வீட்டு வருமானம் மற்றும் செலவுகளின் அடிப்படையில் மாதாந்தம் ஒருவ ரின் வருமானம் 32,621 ரூபாவாகக்
காணப்படுகிறது.

இதேவேளை வருமானம் கூடிய மாகாணமாக மேல் மாகாணம் உள்ளதாகவும்,இம் மாகாணத்தில் வீட்டு வருமானம் மற்றும் செலவு அடிப்படையில் 57, 514 ரூபாவாக காணப்படுவதாகவும அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தை விட வட மாகாண வீட்டு வருமானம்
மற்றும் செலவுகளின் அடிப்படை யில் மாதாந்தம் 34, 500 ரூபாவாக வுள்ளது.

மாவட்ட அடிப்படையில் முல் லைத்தீவு மாவட்டம் 25,526 ரூபா வையும், கிளிநொச்சி மாவட்டம் 27,050 ரூபாவையும்,
மட்டக்களப்பு மாவட்டம் 28,297 ரூபாவையும்,
வவுனியா 44.043 ரூபாவையும் வீட்டு வருமானம் மற்றும் செலவுடையனவாகவுள்ளன.

நாடளாவிய ரீதியில் குடும்பமொன்றுக்கான மாதாந்த இடைநிலை சராசரி வருமானம் 43511 ரூபாவாகவுள்ளது.

நகரப் பகுதிகளில் இது 57,833 ரூபாவா கவும் கிராம பகுதிகளில் 42,133 ரூபாவும், பெருந் தோட்டங்க ளில்29,134 ரூபாவாகவும் காணப்ப டுகிறது. மோசமான வீட்டு வருமா னம் மற்றும் செலவுள்ள பிரதேசமாக தோட்டப்புறங்கள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட் டியுள்ளது.
நாடளாவிய ரீதியில் வீட்டு வருமானம் மற்றும் செலவுகளின் விபரம் வெளியிடப்பட்டது. நாடளாவிய ரீதியில் வீட்டு வருமானம் மற்றும் செலவுகளின் விபரம் வெளியிடப்பட்டது. Reviewed by Madawala News on 10/24/2017 09:35:00 AM Rating: 5