Kidny

Kidny

உலகில், பட்டினியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் .. இலங்கை, பங்களாதேசை விடவும் மோசமான நிலையில்..



அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

உலகில், பட்டினியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக், வங்கதேசம், வடகொரியா போன்ற நாடுகள்கூட இந்தியாவை விட மேம்பட்ட நிலையில் உள்ளன.

பட்டினியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலை, சர்வதேச உணவு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. பட்டியலில், இந்தியா 100-வது இடத்தை ரவாண்டா நாட்டுடன் பகிர்ந்துகொண்டுள்ளது. இந்தியாவுக்கு 31.4 புள்ளிகள் கிடைத்துள்ளன.

இந்த விஷயத்தில், சீனா 29-வது இடத்தில் உள்ளது.  இலங்கை 84-வது இடத்திலும், நேபாளம் 72-வது இடத்திலும், வங்கதேசம் 88-வது இடத்திலும், மியான்மர் 77-வது இடத்திலும் உள்ளன. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈராக் கூட 78-வது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில், ராணுவத்துக்காக அதிகம் செலவிடும் வடகொரியா, 93-வது இடத்தில் உள்ளது.

குழந்தைகளுக்குக் கிடைக்கும் சத்தான உணவு, குழந்தைகள் வளர்ச்சியின்மை, குழந்தைகள் இறப்பு உள்ளிட்ட காரணிகளைக்கொண்டு இந்தக் கணக்கீடு மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட 21 சதவிகித குழந்தைகள், உயரத்துக்கு ஏற்ற எடையுடன் இருப்பதில்லை. இந்தப் பட்டியலில், பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும் நம்மைவிட மோசமான நிலையில் உள்ளன.

பட்டினியால் வாடும் மக்கள் நிறைந்த ஆசிய நாடுகளில், முதலிடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் மூன்றாவது இடத்தில் இந்தியாவும் உள்ளன.

2014-ம் ஆண்டு இந்தப் பட்டியலில், இந்தியா 55-வது இடத்திலிருந்தது. இதே ஆண்டில்தான் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து, மோடி பிரதமர் ஆனார். அதற்குப் பிறகு, இந்தியாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பட்டியலில், இந்தியா 97-வது இடத்திலிருந்தது, இந்த ஆண்டு, மேலும் 3 இடங்கள் பின்தங்கி 100-வது இடத்தை எட்டியுள்ளது. மோடி ஆட்சிக் காலத்தில் 45 இடங்கள் பின்தங்கியுள்ளது
உலகில், பட்டினியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் .. இலங்கை, பங்களாதேசை விடவும் மோசமான நிலையில்.. உலகில், பட்டினியால் வாடும் மக்கள் நிறைந்த நாடுகளில் இந்தியா 100-வது இடத்தில் .. இலங்கை,  பங்களாதேசை விடவும் மோசமான நிலையில்.. Reviewed by Madawala News on 10/16/2017 01:50:00 PM Rating: 5