Yahya

இங்கிலாந்தில் நளீமிய்யா பழைய மாணவர்களின் ஒன்று கூடல் . (படங்கள்)


ஐக்கிய  இராச்சிய நளீமியா நலன்புரி சங்கம் தனது குடும்பத்துடனான முதலாவது ஒன்று கூடலையும் விஷேட
பொதுக் கூட்டத்தையும் கடந்த சனிக்கிழமை (14/10/2017) லெஸ்டர் மாநகரில் ஏட்பாடு செய்திருந்தது.

ஐக்கிய இராச்சியத்தின் மிக தொலைவிலிருந்து நளீமீக்கள் தத்தமது குடும்ப சகிதம் மிகவும் ஆர்வத் தோடு கலந்து சிறப்பித்த விஷேட பொதுக் கூட்டத்தில்  சிறார்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் பிரத்தியேகமாக பல நிகழ்ச்சிகள் ஏட்பாடாகியிருந்தன.

பகல் ஆகாரத்தை தொடர்ந்து விஷேட  பொதுக்கூட்டம் நடப்புகால தலைவர் கலாநிதி ரபீக் மவ்சூன் அவர்களின் தலைமையில் ஷேக் ஆசிர்  அவர்களின் குரான் முரத்தலோடு ஆரம்பமானது.

தலைவரின் வரவேற்பு உரையைத்தொடர்ந்த  தலைமை உரையின் போது  ' சூரா மசத்தின்  விளக்கத் தோடு  'கல்விதான் முன்னேற்றத்துக்கான வழி' என்பது வலியுறுத்தப்பட்டது.

பொருளாளரின் அறிக்கை, செயலாளரின் அறிக்கை அங்கத்தவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள், எதிர் காலத் திட்டங்கள் என நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் நிகழ்ச்சிகள் நடந்தேறின.
சுருக்கமாக எழுதப்பட்டிருந்த யாப்பு சபையோரால் ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்  பட்டதோடு புதிய நிர்வாக  சபைத் தெரிவும்  இடம் பெற்றது.

நடப்பு நிர்வத்துக்கான தலைவராக ஷேக் உமர் பாரூக் அவர்களும் செயலாளராக ஷேக் முகம்மது இஸ்மாயில் அவர்களும் பொருளாளராக ஷேக் அமானுல்லா அவர்களும் சபையோரால் தெரிவு செய்யப்பட்டனர். சகோதர் சுல்பிகார்,கலாநிதி ரபீக், ஷேக் ரிஸ்னி ஆகியோர் அங்கத்தவர்களாகவும்,உப தலைவராக ஷேக் முபஸ்ஸல், உப  பொருளாளராக சகோதரர் முனீர்,   உப செயலாளராக சகோதரர் நஸாஹிர் மவ்லானா அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.


ஜாமியா நளீமிய்யாவின் முன்னேற்றத்துக்கு தாம் செய்து வரும் உதவிகளை ஒழுங்கு படுத்தி தொடராக செய்து வருவது, ஐக்கிய இராச்சியத்தில் வாழும் நளீமீக்கள் மற்றும்  அவர்களின் பிள்ளைகளின் சமூக, கல்வி, கலாச்சார, ஆளுமை விருத்திக்கு உரிய நேரத்தில் உரிய முன்னெடுப்புகளை எடுப்பது என்ற இரட்டை நோக்கை தமது சங்கத்தின் இலக்காகக் கொண்டு இயங்குவது என்றும்  ஏக மனதாக தீர்மானம் பெறப்பட்டது.

இறுதி அமர்வின் போது நளீமிக்களின் இந்த ஒன்று கூடலின் நோக்கம், முக்கியத்துவம் பற்றி தமது குடுப்பத்தவர்களோடு கலந்து பேசியதும் அவர்களின் ஆக்கபூர்வமான கருத்துக்கள் கருத்தில் கொல்லப்பட்டதும் ஒன்று கூடலின் முத்தாய்ப்பாய் இருந்தது.
ஷேக் அமானுல்லா அவர்களின் நன்றி யுரையோடு மகிழ்ச்சிகரமான ஒன்று கூடல் மாலை 6.40 மணிக்கு இனிதே நிறைவு பெற்றது.

நளீமிக்களின் குடும்ப சந்திப்புக்கான இந்த சந்திப்பு மிகவும் பிரயோசனமாக இருந்தது என்ற கருத்து வலுவான  பேசு பொருளாக இருந்தது.கலந்து கொண்ட அனைவரும் நளீமிய்யா குடும்பத்தின் முதலாவது ஒன்று கோடலைப் பற்றி சிலாகித்தத்தோடு பிரிவதற்கு  மனமின்றி பிரிந்தாலும் லெஸ்டர் வாழ் நளீமீக்களின் விருந் தோம்பலில் அடுத்த கனமே இணைந்து கொண்டனர்.
ஆவலோடு முன்னெடுத்த  ஒன்று கூடலை நிறைவாக்கித் தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். அல்ஹம்து லில்லாஹ்.

தகவல்:
ஷேக் முஹம்மது இஸ்மாயில்ய நளீமி
செயலாளர்
ஐக்கிய இராச்சிய நளீமியா நலன்புரி சங்கம்
17/10/2017
இங்கிலாந்தில் நளீமிய்யா பழைய மாணவர்களின் ஒன்று கூடல் . (படங்கள்) இங்கிலாந்தில்  நளீமிய்யா பழைய மாணவர்களின் ஒன்று கூடல் . (படங்கள்) Reviewed by Madawala News on 10/17/2017 10:20:00 PM Rating: 5