Ad Space avaiable

ஏறாவூரின் முன்னாள் தவிசாளர் ஜெமீல் வபாத் . #janaza



ஏறாவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான அல்ஹாஜ் ஏ.எம்.ஜெமீல் இன்று தனது 74ஆவது வயதில் ஏறாவூரில் காலம் ஆனார்...
ஏறாவூரின் சமூக, கல்வி, அரசியல் உட்பட பல்வேறு விடயங்களின் முன்னேற்றத்துக்காக மிகுந்த அர்ப்பண சிந்தையுடன் முன்மாதிரியாக செயற்பட்டு வந்த இவர் ஏறாவூரின் அரசியல் வரலாற்றில் நிலையான ஒரு வகிபாகத்தை வகித்து வந்த ஒருவர்.


வடக்கு கிழக்கில் கொடூர பயங்கரவாதம் நிலவிய 1990 ஆம் ஆண்டு தொடக்கம் 1994 வரையான காலத்தில் ஏறாவூர் பிரதேச சபையின் தவிசாளராக நியமனம் பெற்று திறம்பட தனது நிர்வாக செயற்பாடுகள் மூலமாக ஏறாவூரின் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தவராவார்.

அண்மைக்காலங்களில் கஹட்டோவிட்ட பகுதியில் வசித்து வந்த நிலையில் ஏற்பட்ட சிறுநீரக நோய் காரணமாக மீண்டும் ஏறாவூர் வந்து சிகிச்சைகளை தொடர்ந்து கொண்டிருந்த நிலையிலேயே இன்று அதிகாலை இந்த உலகத்தை விட்டு விடை பெற்றுள்ளார்.


இறைவன் அன்னாரின் சமூக பணிகளை பொருந்திக் கொள்வானாக
தற்போது ஏறாவூர் ஐயங்கேணியில் உள்ள அவரின் சகோதரன் அபுல்ஹஸனின் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் , இன்று அஸர் தொழுகையை தொடர்ந்து , ஏறாவூர் நூருஸ்ஸலாம் மையவாடியில் இடம்பெற உள்ளது.
- அஸ்மி முகம்மத்-
ஏறாவூரின் முன்னாள் தவிசாளர் ஜெமீல் வபாத் . #janaza ஏறாவூரின் முன்னாள் தவிசாளர் ஜெமீல் வபாத் . #janaza Reviewed by Madawala News on 10/01/2017 07:47:00 AM Rating: 5