Kidny

Kidny

சு.கவில் நீக்கப்பட்ட மஹிந்தானந்த புதிய கட்சி தொடங்க நடவடிக்கை. JVP க்கும் இணைய அழைப்பு.



ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் நாவலப்பிட்டி கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி மஹிந்தானந்த அலுத்கமகே
, தற்போதுள்ள அரசாங்கத்துக்கு எதிராக, புதியதொரு கூட்டணியை அமைக்கவுள்ளதாகவும் அதில், மக்கள் விடுதலை முன்னணியின் அங்கம் வகிக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

புதிதாக உருவாக்கப்படவுள்ள இந்தக் கூட்டணியின் மூலம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு, தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதையே நோக்கமாகக் கொள்ளப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

“புதியக் கூட்டணிக்கு என்ன பெயர் மற்றும் என்ன சின்னம் என்பது தொடர்பாக இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடப்போவது உறுதி. 

ஒன்றிணைந்த எதிரணியின் ஆதாரவுட​ன், இந்தக் கூட்டணி அமைக்கப்படும். மேலும், எமது கூட்டணியில் இணைந்துக்கொள்வதற்கு, ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுக்கப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ஐ.தே.க - சு.க இணைந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் இணையவில்லை என்பதற்காக, சு.கவில், மிகவும் நல்ல அரசியல் அனுபவம் ​கொண்ட சிரேஷ்ட அங்கத்தவர்கள் நீக்கப்பட்டனர். ஐ.தே.கவுன் இணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கவுள்ளோம் என்பது தொடர்பான ஆணை கூட  பிறப்பிக்கப்பட்டிருக்க வில்லை” என்று அவர் மேலும் தெரிவித்திருத்தார்.
சு.கவில் நீக்கப்பட்ட மஹிந்தானந்த புதிய கட்சி தொடங்க நடவடிக்கை. JVP க்கும் இணைய அழைப்பு. சு.கவில் நீக்கப்பட்ட மஹிந்தானந்த புதிய கட்சி தொடங்க நடவடிக்கை. JVP க்கும் இணைய அழைப்பு. Reviewed by Madawala News on 10/14/2017 02:05:00 PM Rating: 5