Ad Space Available here

"இம்முறையும் இலங்கை அணியை நானே அழைத்து செல்வேன்" .By: ஹஸன் இக்பால் -
2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை அணியினர் சென்ற பஸ் வண்டி
மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலை அடுத்து அங்கு சர்வதேச கிரிக்கெட் அணிகள் சென்று விளையாட மறுப்புத் தெரிவித்திருந்தன.

பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை மீளக்கொண்டு வரும் நோக்கோடு இலங்கை-பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இருதரப்பு தொடரின் இறுதிT20 போட்டியை பாகிஸ் தானில் நடாத்த பெரும் இழுபறிக்கு மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினால் தமது நாட்டில் விளையாட விடுக்கப்பட்டிருக்கும் இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டு பாகிஸ்தான் செல்லத் தயாராகியிருக்கும் இலங்கை அணிக்கு ஜனாதிபதிக்கு நிகரான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும் என ஊர்ஜிதம் செய்யப்பட் டுள்ளது .

இந்நிலையில், 2009இல் லாகூர் கடாபி அரங்கை நோக்கிச் சென்று கொண்டி ருந்த இலங்கை கிரிக்கெட் அணியினர் பயணித்த பஸ் மீது தீவிரவாத தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவத்தில் குறித்த பஸ் வண்டியின் சாரதியாக பணியாற்றிய மெஹர் முஹம்மத் கலில் என்பவர் தாக்குதல் குறித்து தனது திகில் அனுப வங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் செவ்வியொன்றில் அண்மையில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் தற்போது நிலைமைகள் மாறியுள்ளதாகவும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அணியினர் மிகவும் பாதுகாப்பாக வரவேற்கப்படுவர் எனவும் தானே இம்முறையும் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை அரங்கம் நோக்கி அழைத்துச் செல்லவிருப்பதாகவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார் .

"பாகிஸ்தானில் வந்து விளையாடுங்கள்; பாகிஸ்தானில் கிரிக்கெட்டை மீள் உயிர்ப்பியுங்கள் என அழைப்பு விடுவது இலகுவான காரியம்தான். எனினும், அத் தாக்குதலின் பயங்கர அனுபவங்களை பெற்றவர்கள் என்றவகையில் அவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும்.

அத்தாக்குதலின்போது ஏற்பட்ட அச்சமும் தவிப்பும் நிறைந்த அனுபவங்களும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்ற பயமும் இலகுவில் மறந்துவிடமுடியாத கொடூரங்கள் என்னால் அவர்களின் தயக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால், இலங்கை கிரிக்கெட் அணியினரிடம் தற்போது நான் கூறிக்கொள்ள விரும்புவது என்னவெனில் தற்போது சூழ்நிலை மாறியுள்ளது. பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது. இராணுவம் உங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பை வழங்குவதற்கு தயாராக உள்ளது.

எங்களுடைய மக்கள் அனைவரும் உங்களோடு இருப்பர். உங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப் பட்டுள்ளது."என மெஹர் முஹம்மத் கலில் கூறுகின்றார் 2009 மார்ச் மாதத்தில் இடம் பெற்றிருந்த குறித்த தீவிர வாததாக்குதலில் இலங்கை கிரிக்கெட் அணியினைச் சேர்ந்த 6 பேர் காயங்களுக் குள்ளாகினர்;

அத்துடன் பாகிஸ்தானிய பொலிஸார் அறுவரும், பொதுமக்கள் இருவரும் கொல்லப்பட்டனர்.

 தாக்குதல் நிகழ்ந்த கொடுரமான அன்றைய நாளை சாரதி கலில் நினைவுகூரும் போது.

தீவிரவாதிகள் பஸ்ஸை நோக்கிச் சுட ஆரம்பிக்கும் போது எழுந்த துப்பாக்கிச் சூட்டுத் சத்தங்களை கேட் டதும், தான் ஆரம்பத்தில் மக்கள் கிரிக்கெட் அணியினரை கண்ட சந்தோஷத்தில் வெடிவெடித்து, பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதாக நினைத்துக் கொண்டதாக கூறுகின்றார்.

அடுத்த கணமே இலங்கை அணி வீரர்கள் பேருந்தின் இருக்கைகளில் இருந்து பக்கவாட்டில் கீழே குதித்து மறைந்து கொள்ள முயற்சிப்பதை பேருந்தின் கண்ணாடிகள் வழியே கண் டதும் தான் சுதாகரித்துக் கொண்டதாக கூறுகின்றார் .

"திரும்பிப் பார்த்தபோது வீதியில் இருந்து ஒருவன் துப்பாக்கியால் பேருந்தை நோக்கி சரமாரியாக சுடுவதைக் கண்டேன். ஒரு துப்பாக்கிச் சன்னம் பேருந்தின் கண் ணாடியை பதம் பார்த்தது இன்னொன்று பேருந்துக்கு அப்பால் சென்றது.

சடுதியாக என்ன செய்வதென்று அறியாது அதிர்ச்சியில் ஒருநொடி உறைந்து போனேன்.அணி வீரர்கள் பேருந்தை நிறுத்த வேண்டாம் எனவும் தொடர்ந்து செலுத்து மாறும் கத்தினர்.

அவர்களின் கூக்குரலில் சுயநினைவுக்கு வந்த நான் வண்டியை முன்னோக்கி படு வேகமாக செலுத்தினேன். பாரிய வாகனமான சொகுசு பேருந்து வண்டியை சடுதியில் படுவேகமாக செலுத்துவதென்பது அசாத்தி யமானதொன்று.

எனினும் பத்துப் பதினைந்து பேர் இருகுழுக்கள சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்த அவ்விடத்தை விட்டும் பஸ் வண்டியை நகர்த்தி தப்பிக்க வேண்டும் என்பதே எனது நோக்காக இருந்தது.

" தாக்குதல் நடைபெற்று ஒரு சில மணித்தியாலங்களின் பின்னர் இலங்கை அணி வீரர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக விமானநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் அத்தருணத்தில் தம்மை பாரிய அச்சுறுத்தலில் இருந்து காப் பாற்றிய சாரதி கலீலுக்கு நன்றி தெரிவிக்காமல் நாட்டைவிட்டு தாம் வெளியேற மாட்டோம் என இலங்கை அணி வீரர்கள் தெரி வித்ததாக கூறுகின்றார்.

அந்நேரம் தான் பொலிஸ் நிலையத்தில் இருந்ததாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையினர் தன்னை இலங்கை கிரிக்கெட் அணி வீரர்க ளிடம் அழைத்துச் சென்றதாகவும் கூறுகின்றார்.

 "அங்கே முத்தையா முரளிதரன், குமார் சங்கக்கார, அஜந்த மென்டிஸ், திலான் சமரவீர மஹேல ஆகியோர் எனக்காக காத்திருந்தனர்.

நான் சென்றதும் என்னை ஆரத் தழுவி மரியாதை கலந்த நன்றியை தெரிவித்தனர் அத்துடன் உடனடியாக அவர்கள் தம் கைவசமிருந்த பணத்தை திரட்டி உறையொன்றில் இட்டு என் கைகளில் திணித்து வைத்துக் கொள்ளுமாறு வற்புறுத்தினர்." எனக் கூறுகின்றார் .

இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னர் சாரதி கலில் இலங்கை நாட்டுக்கு விருந்தினராக அழைக் கப்பட்டு கெளரவிக்கப்படிருந்தார் இதன்போது 10 நாட்கள் இலங் கையில் தங்கியிருந்த சாரதி கலீல் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரினதும் குடும்பங்களை சந்தித்துள்ளார்.

அது பற்றி சாரதி கலில் கூறும்போது இலங்கையில் நான் வைபவங் களில் கலந்து கொண்டிருந்தேன் அங்கேயும் நான் பொருட்கொள்வனவு செய்யச் சென்றிருந்த சுப்பர் மார்கெட்களிலும் இலங்கை மககள கூட்டமாக கூடிதங்கள அன்பை வெளிப்படுத்தியிருந் தனர்.

ஹீரோ.ஹிரோ. என அவர்கள் என்னை வாழ்த்தினர் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.இப்பய ணத்தின்போது இலங்கை நாட்டு ஜனாதிபதியினால் இரவுணவு விருந்துபசாரத்திற்கும் அழைக் கப்பட்டு கெளரவப்படுத்தப்பட்டி ருந்தேன்.

" இப்பயணத்தின் பின்னர் சாரதி  கலில் தென்னாபிரிக்கா நாட்டுக்கு சென்று இரண்டு வருடங்கள் அங்கே வசித்து வந்துள்ளார் அதற்கு முன்னரான காலப்பகு தியொன்றில் தென்னாபிரிக்கா வுக்கு இலங்கை அணி கிரிக்கெட் சுற்றுப் போட்டியொன்றை மேற் கொண்டிருந்தது "அதுபற்றி அறிந்ததும் கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி இலங்கை கிரிக்கெட் வீரர்களுடன் உரை யாட முற்பட்டேன்.

ஆனால் ஹோட்டல் வரவேற்பாளர் எனது அழைப்பை பொருட்படுத்த வில்லை. பிறகு நான் யார் என்பதையும் எனது தொலைபேசி இலக்கத்தையும் ஹோட்டல் வரவேற்பாளரிடம் கொடுத்து, மஹேல ஜெயவர்தனவிடம் விடயத்தை தெரியப்படுத்துமாறு கூறினேன்.

மஹேல உடனடியாக எனக்கு அழைப்பை ஏற்படுத் தினார். 'ஓ.முஹம்மத் பாய் எங்கே இருக்கிறீர்கள்?' என கேட்டார். நான் இருப்பிடத்தைக் கூறியதும் உடனடியாக வந்து தன்னை சந்திக்குமாறு வேண்டிக் கொண்டார்.

நாங்கள் இருவரும் சந்தித்து கலந்துரையாடினோம் நல்லதொரு மகிழ்ச்சியான பொழு தொன்றாக அது அமைந்தது.ஐபி எல். போட்டிகளுக்கான அனுமதி சீட்டுக்கள் பலவற்றை எனக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

 அங்கே நான் தோனி, ரெய்னா ஆகி யோரையும் சந்தித்தேன். ரெய்னா என்னுடன் அன்பாக உரையாடினார்.

தோணி, என்னிடம் குறித்த சம்பவத்தை நினைவுபடுத்தி, நீங்கள் மிகவும் நல்ல t காரியம் செய்திருக் கிறீர்கள். நீங்கள் அவர்களைக் காப்பாற்றி இருக்கிறீர்கள்' என பாராட்டியிருந்தார் தென்னாபிரிக்காவில்   இரண்டு வருடங்கள் வசித்து வந்த சாரதி கலில் மீளவும் பாகிஸ்தானுக்கு திரும்பி மீண்டும் பஸ் சாரதியாக பணியாற்றி வருகின்றார்.

 2015 இல் சிம்பாப்வே அணி பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த போதும் சிம்பாப்வே அணி வீரர்களை அரங்கம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்து சாரதியாக  பணியாற்றி யுள்ளார். உலக லெவன் அணி வருகையின் போதும் இவரே சாரதியாக  பணியாற்றியுள்ளார்."இம்முறையும் இலங்கை அணியை நானே அழைத்து செல்வேன்" . "இம்முறையும் இலங்கை அணியை நானே அழைத்து செல்வேன்" . Reviewed by Madawala News on 10/21/2017 12:04:00 PM Rating: 5