Kidny

Kidny

கட்டுகஸ்தொட்ட கொஹாகொட வீதியில், பணிபுரியும் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்த நபர்.


ஹரிஸ்பத்துவ பிரதேச சபையில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நபரொருவர் அவர் பணிபுரியும் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கட்டுகஸ்தொட்ட கொஹாகொட வீதியில் இருந்து குறித்த பாரவூர்தி மற்றும் தற்கொலை செய்துக்கொண்டவரின் சடலம் காவற்துறையால் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா , நானுஓயா பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய எஸ்.பெருமாள் என்ற நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம  ்இதுவரை கண்டறியப்படவில்லை என காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தொட காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கட்டுகஸ்தொட்ட கொஹாகொட வீதியில், பணிபுரியும் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்த நபர். கட்டுகஸ்தொட்ட கொஹாகொட வீதியில், பணிபுரியும் வாகனத்திலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்த நபர். Reviewed by Madawala News on 10/16/2017 04:58:00 PM Rating: 5