Kidny

Kidny

ரோஹிங்கிய குழந்தைகள் அகதி முகாம்களில் பூமியில் நரக வாழ்வை வாழ்கின்றனர். (யுனிசெஃப் அறிக்கை)

மூன்று இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கிய குழந்தைகள் அகதி முகாம்களில் நெரிசல் மற்றும் அடிப்படை
வசதிகள் அற்ற நிலையில் நரக வாழ்க்கை வாழ்வதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (யுனிசெஃப்) அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசின் ஆதரவுடன் நடக்கும் கொடூர படு கொலை, மற்றும் இன சுத்திகரிப்பு நடவடிக்கைகளில் இருந்து தப்பி வந்துள்ள ஆறு இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அண்டை நாடான பங்களாதேஷில் அகதி வாழ்க்கை வாழ்கின்றனர். அவர்களில் பாதி பேர் குழந்தைகள் ஆவர். இந்நிலையில் ஒவ்வொரு வாரமும் 12 ஆயிரம் வரையிலான குழந்தைகள் இந்த முகாம்களில் வந்து இணைந்து கொள்கின்றனர் என யுனிசெஃப் அமைப்பு சுட்டிக்காட்டி உள்ளது.

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மியன்மாரில் மிருகத்தனமான இன அழிப்புக்கு ஆளாகியுள்ளனர். இவர்கள் தங்கள் நாட்டுக்கு திரும்ப செல்வது சாத்தியமற்றது என ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது.

மியன்மார் அரசு சர்வதேச சட்டத்துக்கு கட்டுப்பட்டு அப்பாவி ரோஹிங்கிய அப்பாவி மக்களை பாதுகாக்க தவறி விட்டது என இனப்படுகொலைகளை தடுப்பதற்கான ஐ. நா. செயலாளர் நாயகத்தின் ஆலோசகர் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நாயகம் ஆகியோர் கடந்த புதன் கிழமை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இனப்படுகொலைமனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்கள் ஆகிய சர்வதேச சட்டத்தால் தண்டனைக்குரிய மூன்று வகையான குற்றங்களும் மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப் பட்டுள்ளன என சுட்டிக்காட்டிய ஐ. நா. வின் மூத்த அதிகார்கள் இருவரும் ரோஹிங்கியா நெருக்கடி தொடர்ப்பில் முழு பொறுப்பையும் மியன்மார் இராணுவத் தலைவர்கள் ஏற்க வேண்டும் என தெரிவித்தனர்.

பிராந்தியத்தில் பல தசாப்தங்களாக "மிகவும் மோசமான அகதி நெருக்கடி" க்கு காரணமாக அமைந்துள்ள ரோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக மியான்மர் இராணுவம் மேற்கொள்ளும் திட்டமிட்ட மற்றும் இரக்கமற்ற அடக்குமுறைகளை தடுத்து நிறுத்த “சர்வதேச நடவடிக்கை" அவசியம் என சர்வதேச மன்னிப்புச் சபை கடந்த புதன்கிழமை ழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத் தக்கது.
முகம்மத் மஹ்தூம் அப்துல் ஜப்பார்-
ரோஹிங்கிய குழந்தைகள் அகதி முகாம்களில் பூமியில் நரக வாழ்வை வாழ்கின்றனர். (யுனிசெஃப் அறிக்கை) ரோஹிங்கிய குழந்தைகள் அகதி முகாம்களில் பூமியில் நரக வாழ்வை வாழ்கின்றனர். (யுனிசெஃப் அறிக்கை) Reviewed by Madawala News on 10/20/2017 07:08:00 PM Rating: 5