Kidny

Kidny

உணர்வு பூர்வமான பேச்சுக்களா? அல்லது அறிவு பூர்வமான செயற்பாடுகளா?


By:Hizam Ibrahim

உள்ளூராட்சி தேர்தல் ஒன்று அறிவிக்கப்படக்கூடும் என்ற வகையில் காத்தான்குடியிலும் இம்முறை மும்முனைப்போட்டி
தோன்றுவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகம் காணப்படுகின்றது.

காத்தான்குடியைப் பொறுத்தமட்டில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வின் ஆளுமை செல்வாக்கு செலுத்துவதாக காணப்பட்டாலும் அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் ஏனைய இரு பிரதான அரசியல் இயக்கங்களும்(SLMC,NFGG) தயாராகி வருவதனை அவதானிக்க முடிகிறது .

காத்தான்குடி வாக்காளர்களை பொருத்தமட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உணர்வு பூர்வமான அரசியலை கைவிட்டு சிந்தனை ரீதியான அறிவு பூர்வமான அரசியலை நோக்கி நகர்கின்றார்கள் என்பது கடந்த தேர்தல்களின் முடிவுகள் மூலம் அறிய முடிகின்றது.

இந்த இடத்தில் தான் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலிலும் எவ்வாறான முடிவுகள் கிடைக்கப்பெறும் என்பதனை வகுத்துக்கூறுவது சிரமம்.
முஸ்லிம் அரசியலை பொருத்தமட்டில் பலம்பெரும் அரசியல் இயக்கமான, தேசிய ரீதியில் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சக்தியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் சானக்கியமான காய்நகர்த்தல்களை மேற்கொள்ளத் தயாராகி வருவதனை அதன் தேசியத்தலைவரின் காத்தான்குடி விஜயம் எடுத்துக்காட்டுகின்றது.அந்த வகையில் காத்தான்குடி நகர சபையில் நிச்சயமாக தனக்கான ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மறுமுனையில் நல்லாட்சிக்கான தேசிய முன்னனியின் அரசியல் வியுகமும் அவர்களது தேர்தல் முன்னெடுப்புக்களும் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை ஒட்டுமொத்த காத்தான்குடி சமுகமும் எதிர்பார்த்திருக்கொண்டிருக்கிறார்கள்.

NFGGஉடைய அண்மைய மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டங்களை நோக்குகின்ற போது அவர்களுடைய தேர்தல் வியூகம் மக்களை விழிப்படையச் செய்வதனூடாக பிழையான நபர்களுக்கு வாக்களிப்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளச் செய்வதாக அமையும் என அணுமானிக்கலாம்.

இது தவிர கனிசமான அபிவிருத்திப்பணிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் ஊடாக மக்கள் சேவையில் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருகின்ற இராஜாங்க அமைச்சரின் தேர்தல் முஸ்தீபுகள் சற்று மக்கள் மயப்படுத்தப்பட்டவைகளாக இந்த முறை காணப்படுகின்றது. மக்களே தாங்கள் வாக்களிக்கப்போகும் நபரை தெரிவு செய்வதனூடாக தங்கள் பகுதி பிரதிநிதிகளை தாங்களாகவே தெரிவு செய்யும் முறையுடன் சேர்த்து vision 2022என்ற மகுடத்துடனான அபிவிருத்தி இலக்குகள் என்பவற்றை மையப்படுத்தியதாக அமைச்சரின் தேர்தல் நடவடிக்கைகள் அமையப்பெறும்.
ஆனாலும் கடந்த கால தேர்தல்களில் ஏற்பட்ட சரிவுகளின் காரணமாக இம்முறை உள்ளூராட்சித்தேர்தல் அதி முக்கியத்துவத்துடனான வியூகங்கள் வகுக்கப்பட்டு தேர்தலை முகங்கொடுக்க இராஜாங்க அமைச்சர் தரப்பு தயாராகி வருகிறார்கள் எனக்கூற முடியும்.

எது எவ்வாறாக அமைந்தாலும் கடந்த கால தவறுகளை அனைத்து தரப்பினரும் திருத்திக்கொண்டு இஹ்லாஸான முறையில் சமுக பிரதிநிதித்துவத்தை பெற்று காத்தான்குடி மண்ணின் ஒற்றுமையை பறைசாற்ற வேண்டும்.
உணர்வு பூர்வமான பேச்சுக்களா? அல்லது அறிவு பூர்வமான செயற்பாடுகளா? உணர்வு பூர்வமான பேச்சுக்களா? அல்லது அறிவு பூர்வமான செயற்பாடுகளா? Reviewed by Madawala News on 10/16/2017 06:57:00 AM Rating: 5