Kidny

Kidny

பெண் அதிபர், வீட்டின் குளியலறையில் கத்தியால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழப்பு. #மல்வானை பிரதேசத்தில் சம்பவம்.


மல்வானை லாவுலுஹந்திய பிரதேசத்தில் பெண் பிரதி அதிபரொருவர் நேற்று (18)புதன்கிழமை அதிகாலை 2.00 மணியளவில்
தமது வீட்டின் குளியலறையில்  கத்தியால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பியகம அரச வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்தார்.


தொம்பே கிம்புல்விலவத்த மஹா வித்தியாலயத்தின் பிரதி அதிபரான லலணி மினித்ரிரத்ன (54)என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.


இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாராவார். பிரதி அதிபாரின் கழுத்தை வெட்ட உபயோகிக்கப்பட்ட மன்னா கத்தியும் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 நேற்று(18)அதிகாலை 2.00 மணி யளவில் தமது வீட்டின் குளியலறையிலிருந்து சத்தம் ஒன்று கேட் டதாகவும் தாம் உடனே ஒடி வந்து பார்த்தபோது தமது மனைவியின் கழுத்தை வெட்டி இருந்ததாகவும்  கணவர் கூறியிருக்கிறார்.

உடனே கணவர் வீட்டில் உறங் கிக்கொண்டிருந்த தனது மகனின் உதவியுடன் மனைவியை பியகம அரச வைத்தியசாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

அப்போது அவர் மர ணமடைந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

பூகொடை பதில் மஜிஸ்ரேட் டீ.ஜீ.பீ வீரரத்ன சம்பவ இடத்துக்கு வந்து மஜிஸ்ரேட் விசாரணையை நடத்திய பின்னர் சடலத்தை மரண விசாரணைக்காக றாகம வைத்தியசா லையின் நீதிமன்ற வைத்தியரிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பெண் அதிபர், வீட்டின் குளியலறையில் கத்தியால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழப்பு. #மல்வானை பிரதேசத்தில் சம்பவம். பெண் அதிபர்,  வீட்டின் குளியலறையில்  கத்தியால் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் உயிரிழப்பு. #மல்வானை பிரதேசத்தில் சம்பவம். Reviewed by Madawala News on 10/19/2017 11:10:00 AM Rating: 5