Kidny

Kidny

ஆசிரியையொருவரை முழங்காலிடச் செய்து நீதிமன்ற தண்டனை பெற்றவர் மைத்திரிபால சிறிசேனவால் அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு ஆசிரியர் சங்கம் போர்க்கொடி .


ஆசிரியையொருவரை முழங்காலிடச் செய்து நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்
ஆனந்த சரத்
குமாரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆனமடுவ தொகுதி அமைப்பாளராக நியமித்திருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.


இந்த நபருக்கு அமைப்பாளர் பதவி வழங்கியதன் மூலம் ஜனாதிபதி ஆசி ரியர்களை அவமானப்படுத்தியுள்ளதாகவும் இந்த நியமனத்தைக் கண்டித்து ஆசிரியர்கள் போராட்டம் நடத்தவுள்ளதா கவும் அவர் தெரிவித்தார்.

2013 ஆம் ஆண்டு பாடசாலையொன்றுக்குச் சென்று ஆசிரியையொருவரை முழங்காலிடச் செய்த வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவுக்கு நீதிமன்றம் ஒத்தி வைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதித்ததுடன் 50,000 ரூபா அபராதம் விதித்தது.

பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு மூன்று இலட்ச ரூபா நஷ்ட ஈடு வழங்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அத்துடன், இந்த நபருக்கு கடந்த வடமேல் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேட்புமனு வழங்கவில்லை.

இந்த நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி குற்றவாளியான இந்த நபருக்கு ஆனமடுவ தொகுதியின்  அமைப்பாளர் பதவியை வழங்கியிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆசிரியையொருவரை முழங்காலிடச் செய்து நீதிமன்ற தண்டனை பெற்றவர் மைத்திரிபால சிறிசேனவால் அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு ஆசிரியர் சங்கம் போர்க்கொடி . ஆசிரியையொருவரை முழங்காலிடச் செய்து நீதிமன்ற தண்டனை பெற்றவர் மைத்திரிபால சிறிசேனவால் அமைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு ஆசிரியர் சங்கம் போர்க்கொடி . Reviewed by Madawala News on 10/15/2017 02:53:00 PM Rating: 5