Kidny

Kidny

இந்தியாவில் இடம்பெற்ற அக்சய் குமார் கேடய தற்காப்புக்கலை போட்டி. இலங்கையர்கள் சைப் அலி உற்பட ஆறுபேர் பதக்கங்களை சுவீகரித்தனர்.


-ஜே.எம்.ஹபீஸ்-

இந்தியாலுள்ள மும்பாய் நகரில் இடம் பெற்ற 9 வது வருட அக்சய் குமார்  கேடய கூடோ தற்காப்புக்கலை போட்டியில் சிகான் மொகிடீனின் வழிகாட்லில் சப்தர் அலி வழங்கிய பயிற்சி மூலம் சைப் அலி உற்பட ஆறுபேர் பதக்கங்களை வென்றுள்ளனர்.          

இந்தியாவில் இடம் பெற்ற கூடோ தற்காப்புக்கலைப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த சைப் அலி மற்றும் அன்சமாலி லியன்தெனிய ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றெடுத்துள்ளதுடன் 6 பதக்கங்களை வென்றதாக  இலங்கை கூடோ தற்காப்புக்கலை சம்மேளனத்தின் தலைவர் சிஹான் மொகிடீன் கண்டியில் வைத்துத் தெரிவித்தார்.(23.10.2017)

மேற்படி விடயம் தொடாபாக அவர் மேலும் தெரிவிக்கையில்-

வருடா வருடம் இந்தியாவில் அக்சாய் குமார் கேடயத்தினற்கான செம்பியன் சிப் கூடோ போட்கள் இடம் பெற்று வருகின்றன. அதில் 9வது வருட போட்டிகள் கடந்த 12ம் திகதி முதல் 14ம் திகதி வரை மும்பாய் நகரில் இடம் பெற்றன.

இந்தியாவின் பிரபல திரைப்பட நடிகரான அக்சாய் குமார் மேற்பார்வையில் இது இடம் பெற்று வருகிறது. அதே நேரம் அக்சாய் குமார் தற்காப்புக்கலையை வளர்ப்பதில் பாரிய பங்களிப்புக்களைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் சர்வதேச கூடோ சட்மேளனம், இந்திய கூடோ சம்மேளனம் உற்பட பல அமைப்புக்களில் தலைவராகவும் பல்வேறு பொறுப்புள்ள பதவிகளையும் வகிப்பவராகும். இறுதிப் போட் நிகழ்வுகளுக்கு முன்னணி திரைப்பட நடிகை கத்ரினா கைப் பிரதம அதிதியாகவும் கலந்துகொண்டார்.

இலங்கையிலிருந்து 18 அங்கத்தவர்கள் கலந்துகொண்டதுடன் கபில நிற தர வரிசைப் பட்டியைப் பெற்றுள்ள (பிரவுன் பெல்ட்) சைப் அலியைத் தவிர்ந்த ஏனையவர்கள் கூடோ தொடர்பான புது முகங்களாகும்.

இருப்பினும் கருப்புப்பட்டி வீரர்கள் உற்பட சில சிரேஷ்ட வீர வீராங்கனைகளை துனிவுடன் எதிர்த்து வெற்றி ஈட்டியுள்ளனர். இதன் மூலம் 2 தங்கம் 3 வெள்ளி 1 வென்கலப் பதக்கங்களை வெல்ல முடிந்ததாகவும் குறிப்பிட்டார். அதன் விபரம் பின்வருமாறு-

சைப் அலி  - தங்கம்

அன்சமாலி லியன்தெனிய   - தங்கம்

சமிர மாப்பலாகம    - வெள்ளி

தேசா மென்டிஸ்     - வெள்ளி

கயேசான் குனரத்ன     - வெள்ளி

பவிந்த வர்சன்        - வென்கலம்

ஆகிய பதக்கங்களை வென்றுள்ளனர். மேற்படி குழுவிற்கான பயிற்று விப்பாளராக சப்தர் அலி பணியாற்றியுள்ளார்.

இதர அங்கத்தவர்களாக பெண்கள் பிரிவில் சாந்தி திசாநாயக்கா, பீ. சாமவதி, ஆண்கள் பிரிவில் எஸ். சுந்தரநாயகம்,   குரு பிரசாத் விக்கரசிங்க ஆகியோரும் பங்கு கொண்டுள்ளனர். மேற்படி குழுவை சிகான் மொகிடீன் வழி நடத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவில் இடம்பெற்ற அக்சய் குமார் கேடய தற்காப்புக்கலை போட்டி. இலங்கையர்கள் சைப் அலி உற்பட ஆறுபேர் பதக்கங்களை சுவீகரித்தனர். இந்தியாவில் இடம்பெற்ற அக்சய் குமார்  கேடய தற்காப்புக்கலை போட்டி. இலங்கையர்கள் சைப் அலி உற்பட ஆறுபேர் பதக்கங்களை சுவீகரித்தனர். Reviewed by Madawala News on 10/23/2017 02:20:00 PM Rating: 5