Kidny

Kidny

நீதிமன்றில் வழக்கு இடைவேளையின் போது வெளியே வந்து ஒருவரை சராமாரியாக வாளால் வெட்டிவிட்டு மீண்டும் நீதிமன்றுக்குச் சென்ற மூவர். #இலங்கை.


சாவகச்சேரி நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்குச் சென்றிருந்த மூவர் நீதிமன்ற இடைவேளை நேரத்தில் நீதிமன்றிலிருந்து வெளியேறி
நுனாவில் பகுதியில் ஒருவரை வாளால் வெட்டிக் காயப்படுத்தி விட்டு மீண்டும் நீதிமன்றுக்குச் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

தலை மற்றும் கையில் வெட்டுக் காயங்களுக்கு இலக்கான நுணாவில் மேற்கைச் சேர்ந்த அ.அபுதன் (வயது 27) சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வாள்வெட்டை நடத்திய மூவரும் ஏற்கனவே, குற்றச் செயல் சம்பந்தமான வழக்கில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை தாமதமாக விசாரணைக்கு எடுப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த இடைவேளை நேரத்திலேயே மேற்படி மூவரும் நீதிமன்றை விட்டு வெளியேறி மோட்டார் சைக்கின் ஒன்றில் சென்று நுனாவில் மத்தியில் உள்ளமின்வாயு ஒட்டு நிலைய உரிமையாளரை கூரிய ஆயுதத்தால்வெட்டிக் காயப்படுத்தி விட்டு மீண்டும் நீதிமன்றுக்கு வந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இவர்கள் நுணாவில் மேற்கு மற்றும் மட்டுவில் வடக்கைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகில் உள்ள வாகனங்கள் கழுவும் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெராவைப் பரிசோதித்தபோது தலைக்கவசம்அணிந்த நிலையில் மேற்படி மூவரும் சம்பவ இடத்தில் நின்றமை பதிவாகியுள்ளது.

இவர்களைக் கைது செய்து பொது இடத்தில்சட்டவிரோதமாக கூட்டம் கூடியதுடன், வர்த்தகரை வெட்டி காயப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இவர்கள் பொலிஸாரால் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவர் விசாரணை நடத்திய நீதவான் மூவரையு தலா 30 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல உத்தரவிட்டு வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றில் வழக்கு இடைவேளையின் போது வெளியே வந்து ஒருவரை சராமாரியாக வாளால் வெட்டிவிட்டு மீண்டும் நீதிமன்றுக்குச் சென்ற மூவர். #இலங்கை. நீதிமன்றில் வழக்கு இடைவேளையின் போது வெளியே வந்து ஒருவரை சராமாரியாக வாளால் வெட்டிவிட்டு மீண்டும் நீதிமன்றுக்குச் சென்ற மூவர். #இலங்கை. Reviewed by Madawala News on 10/16/2017 02:52:00 PM Rating: 5