Kidny

Kidny

நேற்று மின்னல் தாக்கி மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்.... முழு விபரம் வெளியானது.


மெத­மு­லன பிர­தே­சத்தில் ஹெலி­கொப்­டர்­களை தரை­யி­றக்கும் தளத்தின் (ஹெலிபேட்) மீது நெல் மணி­களை பரப்பி உல­ர­வைக்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த மூவரே நேற்று பிற்­பகல் 1 மணி­ய­ளவில் இவ்­வாறு மின்னல் தாக்கி உயி­ரி­ழந்­துள்­ளனர்.

மழை வரு­வ­தற்­கான அறி­கு­றிகள் தென்­பட்­ட­த­னை­ய­டுத்து உட­ன­டி­யாக ஹெலி­பேடின் மீது உலர்த்­து­வ­தற்­காக இடப்­பட்­டி­ருந்த நெல்­ம­ணி­களை மழையில் நனை­ய­வி­டாமல் பாது­காப்­ப­தற்கு முயற்­சித்த வேளையில் இம்­மூ­வரும் மின்னல் தாக்கி உயி­ரி­ழந்­துள்­ள­தாக பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

சம்­ப­வத்தில் உயி­ரி­ழந்­த­வர்கள் வீர­கெட்­டிய, கல்­பொத்த பிர­தே­சத்தைச் சேர்ந்த 65 வய­தான டபிள்யூ.ஏ. சிறி­பால, 65 வய­தான ஹின்னி மற்றும் 29 வயது மதிக்­கத்­தக்க சம்பத் என்ற இளைஞர் உள்­ளிட்ட மூவர் என வீர­கெட்­டிய பொலிஸார் அடை­யா­ளங்­களை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

உயி­ரி­ழந்­த­வர்­களின் சட­லங்கள் நீதிவான் பரி­சோ­த­னை­க­ளுக்­காக ஸ்தலத்­தி­லேயே பொலி­ஸாரின் பாது­காப்­புடன் வைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் நீதிவான் பரி­சோ­த­னை­களின் பின்னர் சட­லங்­களை வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்து செல்­வ­தற்­கான ஆயத்­தங்கள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

இந்­நி­லையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் வீரகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நேற்று மின்னல் தாக்கி மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்.... முழு விபரம் வெளியானது. நேற்று மின்னல் தாக்கி மூவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம்.... முழு விபரம் வெளியானது. Reviewed by Madawala News on 10/30/2017 03:16:00 PM Rating: 5