Kidny

Kidny

இளம் தாயையும் மகனையும் காணவில்லை.. போலீசார் அசமந்தம். அடையாளம் காண்பவர்கள் உதவவும்.


அநுராதபுரம், ஹிதோகம பகுதியில் 24 வயதுடைய இளம் தாயும் அவருடைய மகனும் கடந்த 24ஆம் திகதியிலிருந்து
காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாரிக்கா குமாரி ஜயரத்ன என்ற இளம் தாய், தனது மகனான நந்துன் தத்மித்திர ஆகேஷ் உடன் சலவை தூள் வாங்குவதற்கு அதே பிரசேத்தில் இருக்கும் கடைக்குச் சென்ற நிலையிலேயே அவர்கள் இருவரும் காணாமல்போயுள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் காணாமல் போனவர்கள் தொடர்பில் ஹிதோகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டும், பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என காணாமல் போன பெண்ணின் தாயாரான காந்திலத்தா தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களை அடையாளம் காண்பவர்கள் ஹிதோகம பொலிஸ் நிலையத்திற்கு அறியத்தருமாறும் காணாமல் போன பெண்ணின் தாய் கேட்டுக்கொண்டுள்ளார்.
இளம் தாயையும் மகனையும் காணவில்லை.. போலீசார் அசமந்தம். அடையாளம் காண்பவர்கள் உதவவும். இளம் தாயையும் மகனையும் காணவில்லை.. போலீசார் அசமந்தம். அடையாளம் காண்பவர்கள் உதவவும். Reviewed by Madawala News on 10/18/2017 04:11:00 PM Rating: 5