Kidny

Kidny

முஹம்மட் பயாஸை காணவில்லை.... கண்டு பிடிக்க உதவிடுங்கள்.

 


ஏறாவூர் ஓடாவியார் வீதியை சேர்ந்த தாஹிர் முஹம்மட் பயாஸ் என்ற 17 வயது இளைஞனை கடந்த திங்கட்கிழமை 02.10.2017 முதல் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு தன்னாமுனை மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் கற்கை நெறி ஒன்றை தொடரும் குறித்த பயாஸ் எனும் இளைஞர் கடந்த திங்கட்கிழமை வழமை போல் வகுப்பிற்காக சென்றவர் இதுவரை வீடு திரும்பவோ, வீட்டாரை தொடர்பு கொள்ளவோ இல்லை என்பதால் அவரை தேடும் முன்னெடுப்புக்களை உறவினர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் காணாமல் போனமை தொடர்பில் 3ஆம் திகதியே பொலிஸ் முறைப்பாடும் அவரது தந்தையினால் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ளது, 

ஆயினும் காணாமல் போய் 5 நாட்கள் கடந்தும் இவரது தொடர்புகளோ , தகவல்களோ எதுவும் கிடைக்காத நிலையில் பெற்றோர் ஊடகங்களின் உதவியை நாடி உள்ளனர் .

அன்பின் முகப்புத்தக உறவுகளே!
குறித்த இளைஞர் பயாஸ் தொடர்பான தகவல்கள் ஏதாவது உங்களில் யாருக்காவது தெரிந்தால் , 
பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாரு அவரது உறவுகள் கோரிக்கை விடுக்கின்றனர்...


(காணாமல் போன மகனை தேடி அல்லல்படும் குடும்ப உறவுகளின் துயர் துடைக்க , அவர் பற்றிய தகவல் கிடைக்க உதவிடுங்கள் )

தகவல் - முகம்மத் அஸ்மி
முஹம்மட் பயாஸை காணவில்லை.... கண்டு பிடிக்க உதவிடுங்கள். முஹம்மட் பயாஸை காணவில்லை.... கண்டு பிடிக்க உதவிடுங்கள். Reviewed by Madawala News on 10/06/2017 10:11:00 PM Rating: 5