Kidny

Kidny

எதிர்வரும் தேர்தலில் மைத்திரி அணி தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்ப்பதால் மகிந்த & கோவை வீழ்த்த மைத்திரி கடைசி நேரத்தில் பயன்படுத்த உள்ள துருப்புச்சீட்டு...


எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இருபிரிவுகளாக பிளவுபட்டுள்ள நிலையில், அதனை ஐக்கிய தேசியக்கட்சி தனக்குச் சாதகமாக பயன்படுத்த முனையுமென கூறப்படும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியை விழ்த்துவதற்கு தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முக்கிய துருப்புச் சீட்டொன்றை வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலும் மாகாண சபைத் தேர்தலும் நெருங்கிவரும் நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த அணியையும் மைத்திரி அணியையும் இணைக்கும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளதால் இவ் விருதரப்பும் தனித்தனியாகவே தேர்தலை சந்திக்குமென பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.

இந்தநிலைமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் வாய்ப்பை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுவதுடன், உள்ளூராட்சி சபைத்
தேர்தலில் 335 சபைளுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீ லங்காகதந்திரக் கட்சியின் பிளவு இந்தத் தேர்தலுடன் நிச்சயமாகிவிடும் என்பதால் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மகிந்த அணிக்குமான வெற்றிவாய்ப்பை இல்லாது செய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடைசி நேரத்தில் தனது துருப்புச்சீட்டை பயன்படுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

 மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது அவரது அணியைச் சேர்ந்த பலருக்குளதிராக இலஞ்சம், ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இவர்களை நீதிமன்றில் நிறுத்தும் நடவடிக்கைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகிறது.

மகிந்த தரப்பினர் மீதான விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டதால் அடுத்தாக நீதிமன்றம் ஊடான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் மைந்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு வெளியேறுவோருக்கு எதிராக நீதிமன்றமூடாக உடனடியாகவே நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கூறப்படுகின்றது.

இதன்மூலம் மகிந்த தரப்பில் உள்ள  பலரை பணியவைத்து அவர்கள் கட்சியை விட்டு வெளியேறாது தடுக்கும் முயற்சிகள் இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது.

எதிர்வரும் தேர்தலில் மைத்திரி அணி தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்ப்பதால் மகிந்த & கோவை வீழ்த்த மைத்திரி கடைசி நேரத்தில் பயன்படுத்த உள்ள துருப்புச்சீட்டு... எதிர்வரும் தேர்தலில் மைத்திரி அணி  தோல்வியை சந்திக்கும் என எதிர்பார்ப்பதால் மகிந்த & கோவை வீழ்த்த மைத்திரி கடைசி நேரத்தில்  பயன்படுத்த உள்ள துருப்புச்சீட்டு... Reviewed by Madawala News on 10/16/2017 03:21:00 PM Rating: 5