Kidny

Kidny

மொறகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தியால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பணம். மது, மாது, சூதில் செலவானது.


மொறகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்க அபிவிருத்தி நடவடிக்கைகளினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகைகள் குறித்த குடும்பங்களைச் சேர்ந்த அதிக எண்ணிக்கையிலான குடும்பத் தலைவர்களினால் வீண்விரயம் செய் யப்பட்டிருப்பதாக அவர்களது மனைவிமார் முறைப்பாடு செய்திருப்பதாக நாவுல பொலிஸார் தெரிவித்தனர்.


பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தலைவர்களுக்கு இழப்பீடாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை அவ்வவ் குடும்பங்களைச் சேர்ந்த தலைவர்கள், உயர்ந்த ரக மதுப்புட்டிகளை கொள்வனவு செய்வதற்கும் போதைப் பொருட்களைக் கொள்வனவுசெய்வதற்கும் செலவிட்டிருப்பதுடன், விலை மாதருக்கு வழங்கியுள்ளதாகவும் குடும்பத் தலைவிகளும் குடும்ப உறுப்பினர்களும் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தின் தலைவர்களன கணவன்மார் கருதப்பட்டு வரும் நிலையில், தத்தமது வீடு வாசல்கள், நிலபுலன்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக  வழங்கப்பட்ட பாரியளவிலான பணம், குடும்பத் தலைவர்களான கனவர்களிடமே   வழங்கப்பட்டமையினால், குடும்பங்கள் பலவும் தொடர்ந்தும் திர்க்கதிக்குள் தள்ளப்பட்டிருப்பதாக குடும்பத் தலைவி கள் அழுது புலம்புகின்றனர்.
மொறகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தியால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பணம். மது, மாது, சூதில் செலவானது. மொறகஹகந்த நீர்த்தேக்க அபிவிருத்தியால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான பணம். மது, மாது, சூதில் செலவானது. Reviewed by Madawala News on 10/04/2017 02:31:00 PM Rating: 5