Kidny

Kidny

மகனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை.


தனது மகனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொம்பே கலுகொந்தயாவ பிரதேசத்தில் நேற்றுக் காலை (3ம் திகதி) 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


நோயினால் அவதிப்பட்ட தனது மகனின் தொல்லை தாங்க முடியாமல் 75 வயது எச்.ஏ கருணாசேன என்ற தந்தை, எச்.ஏ உதயபியன்த என்ற மகனை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


இவர்களின் பிரேதத்தை பார்வையிட்ட பூகொட மஜீஸ்தி ரேட் நீதிமன்ற நீதவான் செல்வி நிலுடலி லங்காபுர இவர்க ளின் பூத உடலை அடக்கம் செய்யும் படியும் அடக்கம் செய்யும் சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கு அறிவிக்கும் படியும் உத்தரவிட்டார். இது சம்பந்தமான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 19ம் திகதி பூகொட நீதிமன்றத்தில் இடம்பெறும்.

மகனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை. மகனின் கழுத்தை வெட்டிக் கொலை செய்து விட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை. Reviewed by Madawala News on 10/04/2017 11:47:00 AM Rating: 5