Kidny

Kidny

தம் சொந்த இலாபத்துக்காக முஸ்லிம் சமூகத்தை பலிகடாவாக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள்.


சொல்வதை தவிர வேறு வழியில்லை

முஸ்லிம் அரசியல் பரப்பில் சிவில் சமூகத்தலைவர்களின்
செயற்பாடு பற்றி பலமான கதையாடல்கள் எழத்தொடங்கியுள்ளன.

ஒரு புறம் முஸ்லிம் சமூகத்தின் புத்திஜீவிகள் பலர் இதனைப்பற்றி பேசுகிறார்கள்.

மறு புறம் சோனக கட்சிகளின் அரசியல் பெருச்சாளிகளும் இது பற்றி அரசல் புரசலாக கதை விடுகிறார்கள்.

முதலாவது சாராரின் எண்ணம் பாவப்பட்ட இந்த சமூகத்தின் மீதான பச்சாதாபமாகும்.

இரண்டாவது சாராரின் எண்ணம் ஆடு நனைய ஓநாய் அழுத கதையாகும்.
நீங்கள் நன்றாக அவதானித்திருப்பீர்கள்....


முஸ்லிம் சமூகத்தை அரசியல் ரீதியாக நெருக்கடிகளுக்குள் தள்ளிவிட்டு அதற்கான பாரிய அடகுத்தொகை கை மாறிய பிறகுதான் பல சந்தர்ப்பங்களில் இந்த ஓநாய்கள் கண்ணீர்வடித்திருக்கின்றன!


இதற்கு மிகச்சிறந்த அண்மைய உதாரணந்தான், மாகாண சபைகள் திருத்தச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்ததும் இப்போது ஓநாய்கள் புலம்பித்திரிவதும்.....

அவங்க ஏதோ தெரியாத்தனாமா அதுல போய் மாட்டிக்கிட்டாங்களாம், இப்போ எல்லை பிரிக்க (delimitation) செய்ய முஸ்லிம் சமூக புத்தி ஜீவிகள் உதவ வேண்டுமாம். அதாவது சிவில் சமூக தலைவர்கள் முன்வரவேண்டுமாம்!
நல்ல கதை!


தாங்க முடியாத தாகத்தினால் சாராயம் வாங்கி வைத்திருக்கிறோம்.... வாருங்கள் வந்து சரிவகிதமாக எங்கள் மதுக்கோப்பைகளில் ஊற்றித்தந்து விட்டுப்போங்கள் என்ற மாதிரியான கதைதான் இது!


இவர்கள் தாங்கள் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிற போது மாத்திரந்தான் உலமா சபையினையும், சிவில் சமூகத்தையும் தேடுகிறார்கள்....
ஆற்றைக்கடக்கும் வரை அண்ணன் தம்பி பிறகு நீயாரோ நான் யாரோ கதைதான்.


சிவில் சமூகத்தலைவர்களின் பணியென்பது கனதியானது.
அதனை செய்வதற்கு முதலில் நமது சமூகம் Civilized ஆகவேண்டும்!
ஆகியிருக்கிறதா?


Civilized ஆகாத நம்போன்ற சமூகங்களில் எங்கே சிவில் சமூக செயற்பாடுகள் வெற்றி தரப்போகின்றன?


அப்படி வந்தாலும் 500,1000 இற்கு சோரம் போகிற வாக்காளர்களால் அந்த சிவில் சமூக செயற்பாடுகள் சிம்பிளாக புறக்கணிக்கப்படும்.

அந்த புறக்கணிப்பின் மீது நமது so called அரசியல்வாதிகள் வடிவாக சவாரி போவார்கள்.

பெரும்பான்மை சமூகத்திற்குள் அது சாத்தியமானது!


மறைந்த சோபித தேரோ தலைமையில் நல்லாட்சி ஒன்றை வேண்டி சிவில் சமூக தலைவர்களும், செயற்பாட்டாளர்களும் அணி திரண்டனர். வேறொரு அரசை ஸ்தாபிக்கும் இலக்கு எய்தப்பட்டது!

ஆனால் துரதிஷ்டம் எதிர்பார்த்த நல்லாட்சியை நிறுவ ஒண்ணாமல் போனது துயரம்.

சோபித தேரோவோடு நல்லாட்சியும் மரணித்துப்போனது.

இந்த பின்புலத்தில் முஸ்லிம் சமூகப்பரப்பில் ஏலவே நிறுவப்பட்ட தேசிய சூறா சபை போன்ற சிவில் அமைப்புகளாலும் இந்த சமூகத்திற்கு ஏற்பட்ட அரசியல் நெருக்குவாரங்களின் போது எதனையும் செய்ய இயலவில்லை.
வெறும் அறிக்கைகளோடு நின்று கொண்டார்கள்.


ஒரு துளி அழுத்தமும் இந்த ஓநாய்களின் மீது அவர்களால் பிரயோகிக்கப்பட்டதாக தெரியவில்லை!

ஆகவே சமூகத்தின் மீதான கழிவிரக்கத்தால் சிவில் சமூகச்செயற்பாடுகளில் கூட்டாக இணைந்து செயற்பட ஆர்வங்காட்டும் புத்திஜீவிகளும், செயற்பாட்டாளர்களும் இந்த கள யதார்த்தங்களை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.


சந்தர்பத்திற்கு உங்களை மதுக்கிண்ணம் நிரப்புகிற எடுபிடிகளாக இந்த தந்திர ஓநாய்கள் பயன்படுத்துகிற ஆட்களாக இராமல்......


ஓநாய்களை தந்திரமாக கையாளக்கூடிய, முஸ்லிம் சமூக அரசியல் பரப்பிலிருந்து இந்த அசிங்கங்களை மிக கவனமாக அகற்றி விடக்கூடிய ஆளுமை படைத்த சிவில் சமூக தலைவர்களே எமது தேவை!


மாறாக வெறும் தலையாட்டிகளோ, அரசியல்வாதிக்கு வாலாக இருந்து அவரை கிழக்கின் வாசல் , மேற்கின் கதவு என புகழ்பாடித்திரியும் “அறிவுபீடங்களோ” அல்ல!

-முஜீப் இப்ராஹீம்- 
தம் சொந்த இலாபத்துக்காக முஸ்லிம் சமூகத்தை பலிகடாவாக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள். தம் சொந்த இலாபத்துக்காக  முஸ்லிம்  சமூகத்தை பலிகடாவாக்கும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள். Reviewed by Madawala News on 10/02/2017 01:53:00 PM Rating: 5