Kidny

Kidny

ஓட்டமாவடி முஹையிதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபைக்கு மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் வாழ்த்து செய்தி.


-எம்.எம். முஹம்மட் பைறூஸ்-

ஓட்டமாவடி முஹையிதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாக சபை உறுப்பினர்களுக்கு மீராவோடை
மீரா ஜும்ஆ பள்ளிவாயல் பரிபாலன சபையினரின் வாழ்த்துச் செய்தி.

ஓட்டமாவடி முஹையிதீன் ஜும்ஆ பள்ளிவாயலின் புதிய நிருவாகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது பள்ளிவாயல் பரிபாலன சபையின் அனைத்து உறுப்பினர்களது சார்பிலும், எமது மீராவோடைப் பிராந்திய பொதுமக்கள் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இப்பள்ளிவாயலின் நிருவாகத் தெரிவின் மூலம் பல்துறை சார்ந்தவர்கள், சமூக சிந்தனையுடன் செயற்படும் ஆர்வலர்கள் உள்ளிட்ட சபை தெரிவு செய்யப்பட்டுள்ளமை கல்குடா பிரதேசத்தின் எழுச்சிக்கும் அபிவிருத்திக்கும் மேலும் பலம் சேர்க்கும் என நம்புகின்றோம். எமது பிரதேசத்தின் மகத்துவமிக்க இப்பள்ளிவாயலின் நிருவாகத்தினால் முன்னெடுக்கப்படும் பணிகள், மார்க்கச் செயற்பாடுகள், கல்வி, கலாசாரம் சார்ந்த அனைத்து பணிகளிலும் எமது மீரா ஜும்ஆ பள்ளிவாயல் என்றும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுவதற்கு தயாராக உள்ளது என்பதைத் தெரிவிக் கொள்கின்றோம்.

எமது சமூகத்தின் தேவை மற்றும் நலன் கருதி தமது வேலைப்பழுவிற்கு மத்தியில் இப்பள்ளிவாயலின் செயற்பாட்டில் அக்கரையுடன் செயற்பட வேண்டும் என்று தூய்மையான எண்ணத்துடன் முன்வந்து நிருவாக சபைக்கு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கும், போட்டியிட்ட ஏனைய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பள்ளிவாயல் பரிபாலன சபை
மீரா ஜும்ஆ பள்ளிவாயல்
மீராவோடை
ஓட்டமாவடி முஹையிதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபைக்கு மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் வாழ்த்து செய்தி. ஓட்டமாவடி முஹையிதீன் ஜும்ஆ பள்ளிவாயல் நிர்வாக சபைக்கு மீராவோடை மீரா ஜும்ஆ பள்ளிவாயலின் வாழ்த்து செய்தி. Reviewed by Madawala News on 10/31/2017 10:53:00 AM Rating: 5