Kidny

Kidny

மயக்க மருந்து கொடுத்துவந்த திருடர்கள் இறுதியில் சிக்கினர்.


முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மயக்க மருந்து கலந்த பானங்களை பருகக் கொடுத்து கொள்ளையில் ஈடு பட்டு வந்த இருவரை பொலிஸார் நேற்று கைது செய்தனர்.

சந்தேக நபர்கள் பன்வில மற்றும் இறக்குவானை ஆகிய பிரதேசங்க ளைச் சேர்ந்த 36 மற்றும் 39 வயதுடையவர்களாவர்.


முச்சக்கர வண்டிகளை வாட கைக்கு அமர்த்தி அதன் சாரதிகளுடன் சிறந்த நட்பை ஏற்படுத்தி இடைநடுவே மயக்க மருந்து கலந்த பானங்களை
அருந்தக் கொடுத்து அவர்களின் பணம் மற்றும் நகைகளை கொள்ளை யிடுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

இச்சந்தேகநபர்கள் ஏற்கனவே கட்டுநாயக்கா, கேகாலை, மாத்தளை, வவுனியா, கொஸ்கொட ஆகிய பிரதேசங்களில் இவ்வாறான
கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவல் களுக்கமையவே இவ்விரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ள னர். பொலிஸார் மேலதிக விசாரணை களை முன்னெடுத்துவருகின்றனர்.

மயக்க மருந்து கொடுத்துவந்த திருடர்கள் இறுதியில் சிக்கினர். மயக்க மருந்து கொடுத்துவந்த  திருடர்கள் இறுதியில் சிக்கினர். Reviewed by Madawala News on 10/07/2017 10:18:00 AM Rating: 5