Ad Space Available here

ஒரு காலத்தில் வடகொரியாவை பார்த்து சிரித்த சர்வதிகார அமெரிக்கா இப்போது அஞ்சி நடுங்குவது ஏன்.?


-அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்-

கணக்கில் அடங்காத ஏவுகணை தோல்விகள், சிறுபிள்ளைத்தனமான ஹாக்கிங் வேலைகள்,
ஏகப்பட்ட பொருளாதார மற்றும்க் ஐ.நா தடைகள், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் கீழ்நோக்கிய பயணமென - ஒருகாலத்தில் வடகொரியாவை பார்த்து உலக நாடுகள் சிரிக்க பல காரணங்கள் இருந்தன.

இப்போது நிலைமை தலைகீழ் - இது வடகொரியாவை பார்த்து அஞ்சி நடுங்கும்; தூக்கம் தொலைக்கும் நேரம்.!

தனக்கு இருக்கும் மாபெரும் சக்தியை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று புரியாமல் தோன்றியதையெல்லாம் செய்வதை சர்வதிகாரம் என்பார்கள். அப்படியான ஒரு நிலைப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு நாடு தான் வடகொரியா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதன் குறிப்பிட்ட 4 சக்திகள் தான் அமெரிக்கா உட்பட அனைத்து உலக நாடுகளை பதற வைத்துக் கொண்டிருகிறது.!

 
04. சைபர் தாக்குதல் :
வடகொரியாவின் பல வழக்கமான பலவீனங்களை ஈடுகட்டும் ஒரு சமச்சீரற்ற வழிமுறை தான் பிற நாடுகளுக்கு எதிரான வட கொரியாவின் சைபர் தாக்குதல்கள். சமீப காலமாக வடகொரியா பலவகையான சைபர் தாக்குதல்களில் ஈடுபடுவதின் மூலம் பியொங்யாங் (Pyongyang - அந்நாட்டின் தலைநகரம்) பற்றிய வலிமையை சற்று அறிந்து கொள்ள முடிகிறது.
 
ஒரு காலத்தில் உலகமே வடகொரியாவை பார்த்து சிரித்தது.!

இருப்பினும், சீனா மற்றும் ரஷ்யா அளவிற்கு சிறப்பான, தாக்குப்பிடிக்கக்கூடிய சைபர் தாக்குதல்களை நிகழ்த்த வடகொரியா திறமையற்றதாகவே கருதப்பட்டாலும், மிகவும் ரகசியமான முறையில் நிகழ்ந்த அதன் ஏவுகணை தொழில்நுட்ப வளர்ச்சியினை போலவே அதன் சைபர் தாக்குதல் வல்லமையும் அதிகரித்திருந்தாலும் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. ஏனெனில் ஒரு காலத்தில் உலகமே வடகொரியாவின் ஏவுகணைகளை பார்த்து சிரித்தது; இப்போது மிரண்டு போய் கிடக்கின்றன.

 
03. இரசாயன ஆயுதங்கள் :

வடகொரியாவிடம் பெரிய அளவிலான ரசாயன ஆயுதங்களின் கையிருப்பு இருக்கிறது என்பது உலக நடுகள் அறிந்த விடயமே. உள்நாட்டில் தயாரிக்கப்படும் இவ்வகை ஆயுதங்களை விமானம் அல்லது ஏவுகணைகளில் பொருத்தி இலக்குகள் குறி வைக்கப்படலாம் என்பது தான் உச்சக்கட்ட விபரீதம்.
 
பலவீனமான பொருளாதாரம்.!

வட கொரியாவின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் 'தனிமை' போன்ற போன்றவைகள் இவ்வகையான ஆயுதங்களை அதிகம் உற்பத்தி செய்ய விடாமல் தடுக்கிறது என்பது கொரிய தீபகற்பத்திற்கும், உலக நாடுகளுக்கும் ஒரு சிறிய நல்ல செய்தியாகும்.
 
02. ஹை டெக் பீரங்கிகள் :

அமெரிக்கா மற்றும் தென் கொரியா ஆகிய இரண்டு உலக நாடுகளும் 2 மணி நேரத்தில் நகரம் ஒன்றை அழிக்கும் அளவு ராணுவ சக்தி கொண்டது என்பதை ஈடுகட்டும் அளவு ஆயிரக்கணக்கான பீரங்கிகளை வடகொரியா கொண்டுள்ளது. முக்கியமாக 25 மைல் தூரம் கடந்து தாக்கும் 170 எம்எம் கோக்ஸன் (170 mm Koksan) வகை பீரங்கிகள்.
 
01. பேலிஸ்டிக் மிஸைல்ஸ் :
பேலிஸ்டிக் மிஸைல்ஸ் (Ballistic Missiles) அதாவது விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள். வடகொரியா ஒரு குறிப்பிடத்தக்க ஏவுகணை திறன் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இதற்கு ரஷ்யா மற்றும் சீனாவின் பெரும்பாலான ஆயுதங்கள் ரஷ்யா மற்றும் சீனா உதவியுடன் உருவாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
தோராயமாக.!
தற்போதைய நிலவரப்படி வடகொரியாவிடம் தோராயமாக, சுமார் 600 குறுகிய தூர ஸ்கட் ஏவுகணைகள் (Short-range Scud missiles), 200 னோடோங் ஏவுகணைகள் (Nodong missiles), ஐம்பது முசூதன் (Musudan) மற்றும் தெப்போடோங் (Taepodong) ஏவுகணைகள் இருக்கின்றது. இந்த எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்திருக்கவும் வாய்ப்புகள் மிக அதிகம்.
 
உலகின் எந்தவொரு பகுதியையும் அடையும் வல்லமை.!

இரசாயன அல்லது அணு சக்தி கொண்டு உருவாக்கம் பெற்ற இவ்வகை ஆயுதங்கள் முதலில் வடகொரிய தீபகற்பத்தை சுற்றிய வீச்சை மட்டுமே கொண்டிருந்தன. ஆனால் தற்போது அமெரிக்கா உட்பட உலகின் எந்தவொரு பகுதியையும் அடையும் வல்லமை கொண்டுள்ளன; இந்த பட்டியலில் இந்தியாவும் அடங்கும். வடகொரியா ஏவுகணையில் இருந்து தப்பிக்கும் ஒரே கண்டமாக ஆப்பிரிக்கா மட்டுமே இருக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு காலத்தில் வடகொரியாவை பார்த்து சிரித்த சர்வதிகார அமெரிக்கா இப்போது அஞ்சி நடுங்குவது ஏன்.? ஒரு காலத்தில் வடகொரியாவை பார்த்து சிரித்த சர்வதிகார அமெரிக்கா இப்போது  அஞ்சி நடுங்குவது ஏன்.? Reviewed by Madawala News on 10/30/2017 06:49:00 AM Rating: 5