Kidny

Kidny

தெமினா ஜன்ஜுவா நாளையும் நாளை மறுதினமும் இலங்கைக்கான விஜயத்தில்..


பாக்கிஸ்தானின் வௌிவிவகார செயலாளர் தெமினா ஜன்ஜுவா நாளையும் நாளை மறுதினமும் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் பாக்கிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் 5 வது கட்ட சந்திப்பில் பங்கேற்பதற்காகவே அவர் இலங்கை வரவுள்ளார்.

4 வது கட்ட பேச்சுவார்த்தை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது.

அவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

அத்துடன், இரு தரப்பு விவகாரங்கள், பிராந்திய மற்றும் சர்வதேச அரங்கைப் பொறுத்தவரையில் இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்களின் முழுத் தகுதி குறித்த விரிவாக ஆராயப்படுவுள்ளது.

இந்த நிலையில், பாக்கிஸ்தான் வௌிவிவகார செயலாளர், இலங்கையில் "பாக்கிஸ்தான் முன்னாள் மாணவர் சங்கத்தையும்" ஸ்தாபிக்கவுள்ளார்.



தெமினா ஜன்ஜுவா நாளையும் நாளை மறுதினமும் இலங்கைக்கான விஜயத்தில்.. தெமினா ஜன்ஜுவா நாளையும் நாளை மறுதினமும் இலங்கைக்கான விஜயத்தில்.. Reviewed by Madawala News on 10/16/2017 06:45:00 PM Rating: 5