Kidny

Kidny

உலகின் தலைசிறந்த பந்து வீச்சு எங்களுடையது தான். பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமது பெருமிதம்.


இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 5- 0 என வெள்ளையடித்து வென்றது அறிந்ததே.  நேற்று  கடைசி ஒருநாள்
போட்டியில் மிகச்சிறப்பாகவும்  விளையாடியது . 

இந்நிலையில் தங்களது பந்துவீச்சு தான் உலகின் தலைசிறந்த பந்து வீச்சு என பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமது கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், சாம்பியன்ஸ் கோப்பை  தொடரிலிருந்தே எங்கள் அணி சிறப்பாக பந்து வீசி வருகிறது. 


எதிரணியை 230 முதல் 240 ஓட்டங்களுக்குள் நாங்கள் கட்டுப்படுத்துவதால் எளிதாக வெற்றி காண முடிகிறது. 

பந்துவீச்சாளர்களுக்கு கட்டாயம் நன்றி கூற வேண்டும், குறிப்பாக தற்போது ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருக்கும் ஹசன் அலி எங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கிறார். அவரை நான் பாராட்டுகிறேன், 

அதேபோல சுழற்பந்து வீச்சாளர் ஷதாப், உஸ்மான் கான், பஹீம் அஷ்ரப், ரும்மான் ரயீஷ் மற்றும் ஜூனைத் கான் ஆகியோரும் சிறப்பாக பந்து வீசுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
உலகின் தலைசிறந்த பந்து வீச்சு எங்களுடையது தான். பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமது பெருமிதம். உலகின் தலைசிறந்த பந்து வீச்சு எங்களுடையது தான். பாகிஸ்தான் அணித்தலைவர் சர்ப்பராஸ் அகமது பெருமிதம். Reviewed by Madawala News on 10/24/2017 02:11:00 PM Rating: 5