Kidny

Kidny

அகதிகள் என்ற போர்வையில் ஐ.எஸ்.எஸ்.ஐ தீவிரவாதிகள் நாடுகளில் ஊடுருவியது உலகமே அறியும். இலங்கை அரசும் கவனமாக இருத்தல் வேண்டும்.


ரோஹிங்யா அகதிகள் மூன்று மாத காலமாக கல்கிஸ்சையில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு அகதிகளாக வந்த குழந்தைகள் சர்வதேச பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

இத்தகைய பராமரிப்புகளை தனிப்பட்ட அமைப்புகளே செய்தன.

இது தமது தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அரசும் இதுவரை இந்த பிரச்சினையை கண்டுகொள்ளவில்லை.

ஆனால் இந்த பௌத்த அமைப்புளின் போராட்டத்தின் பின்னரே இந்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்தன

அவற்றைப் பற்றி இந்த அமைப்புகள் கண்டுகொள்ளாதது கவலைக்குரிய விடயம். அரசும் இந்த விடயத்தில் பாரா முகமாக இருப்பது அனைவரும் அறிந்தது என முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும், அகதிகள் என்ற போர்வையில் ஐ.எஸ்.எஸ்.ஐ தீவிரவாதிகள் உலக நாடுகளில் ஊடுருவி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து என்ன நடந்துள்ளது என்பதை உலகமே அறியும்.

ஆகவே அகதிகள் விடயத்தில் இலங்கை அரசும் கவனமாக இருத்தல் வேண்டும்.

அதேநேரத்தில் ஐ.நா சபையில் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு எதிராக புரிந்த போர் குற்றத்திற்காக தீர்மானம் கொண்டு வந்த சந்தர்ப்பத்தில் இதே இலங்கையிலுள்ள இஸ்லாமிய அமைப்புகள் இலங்கை அரசோடு சேர்ந்து யுத்த நேரத்தில் தமிழர்களுக்கு எவ்வித பிரச்சினையும் நடக்கவில்லை என ஒத்து பாடியது யாவரும் அறிந்தது.
அகதிகள் என்ற போர்வையில் ஐ.எஸ்.எஸ்.ஐ தீவிரவாதிகள் நாடுகளில் ஊடுருவியது உலகமே அறியும். இலங்கை அரசும் கவனமாக இருத்தல் வேண்டும். அகதிகள் என்ற போர்வையில் ஐ.எஸ்.எஸ்.ஐ தீவிரவாதிகள் நாடுகளில் ஊடுருவியது உலகமே அறியும். இலங்கை அரசும் கவனமாக இருத்தல் வேண்டும். Reviewed by Madawala News on 10/04/2017 10:55:00 AM Rating: 5