Kidny

Kidny

புல்மோட்டையில் பேரினவாதிகளால் மீண்டும் காணி கொள்ளைக்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்க திட்டமா ?


புல்மோட்டையில்  பேரினவாதிகளால் மீண்டும் காணி கொள்ளைக்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்க திட்டம் அன்வர் மாகாண காணி ஆணையாளருடன் தொலைபேசியில் பேச்சு 

புல்மோடடை பிரதேசத்திலுள்ள கண்ணீராவ, மாலனூர், சமணக்குளம் போன்ற பகுதிகளில் பௌத்த விகாரைக்கென சுமார் 100 ஏக்கருக்குமேல் காணி அளவிட்டு கொடுப்பதாக பெறப்பட்ட தகவலை அடுத்து முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் இன்று 09.10.2017 திகதி 1.28 மணியளவில் கிழக்கு மாகாண காணி ஆணையாளருடன் கொழும்பில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு இது தொடர்பாக வினவியபோது அவ்வாறான செயல்பாடு ஒன்று இல்லை குறித்த பகுதியின் பௌத்த பிக்கு பௌத்த விகாரை காணி தொடர்பான பகுதியை பார்ப்பதற்காகவே நாளை 10.10.2017 புல்மோட்டை 14ம் கட்டை மாலானோர் பகுதிக்கு விஜயம் மேற்கொள்வதாக தெரிவித்தார்

அத்துடன் மாவட்ட அரசாங்க அதிபருக்கும் தெரிவிக்கப்பட்டதாக அன்வர் தெரிவித்தார் 

மேலும் குறித்த பகுதிகள் அடங்கிய பகுதிகள் ஏலவே புனித பூமிக்கு அளவிட முற்பட்டபோது பிரதேச அரசியல் பிரமுகர்கள் மற்றும் பிரதேச மக்களுடன் வீதியில்  இறங்கி எதிர்ப்பை காட்டி மக்களுக்கு சொந்தமான காணி என்பதை வெளிப்படுத்தி கடந்த மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் தடை செய்யப்பட்டதாகவும் இது தொடர்பாக இன்னும் நீதிமன்றில் வழக்குகள் இடம்பெறுவதாகவும் அவை தொடர்பாக மிக அவதானமாக தாங்கள் செயல்படவேண்டும் எனவும் அன்வர் கேட்டுக்கொண்டார் 

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மாவட்ட செயலாளர்,மாவட்ட பொலிஸ் ம அதிபர் ஆகியோருக்கு தெரிவித்ததாகவும் அன்வருக்கு தெரிவித்தார்

மேலும் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப்,இம்ரான் மஹ்ரூப் ஆகியோருக்கு தெரிவித்ததுடன் அவர்களும் உரிய அதிகாரிகளுடன் பேசுவதாக தெரிவித்தனர்

பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் அவர்கள் மாகாண காணி ஆணையாளர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது மாலனூர் பிரதேசத்திலுள் இருக்கின்ற சில குடும்பங்கள் தமக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்க கோரி கேட்டதற்கு அமைவாக நாளை 10.10.2017 குறித்த பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக ஆணையாளர் கூறியதாகவும்  மேலும் புல்மோட்டை பிரதேசத்தில் 10 க்கும் மேற்பட்ட மக்களுக்கான காணி அனுமதி பத்திரம் வழங்கவேண்டிய நிலையில் புல்மோட்டை பிரதேச மக்களையும் கருத்தில்கொண்டு பிரதேச மக்களின் காணிகளுக்கு பிரச்சினை ஏற்படா வண்ணம் நடந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக அப்துல்லாஹ் மஹ்ரூப் அன்வரிடம் தெரிவித்தார்  

இதேவேளை குறித்த பகுதியில் அண்மையில் குடியேற்றப்பட்ட சிங்கள மக்கள் குடி இருப்பதற்கு பிரதான புல்மோட்டை அனுராதபுர வீதியில் சமாதி விகாரைக்கு முன்பாகவுள்ள வீதியோரம் குறித்த பௌத்த பிக்குவினால் குடி அமர்த்தப்பட்டவர்களுக்கு எதிராக குச்சவெளி பிரேதச செயலாளரால் அவசர அறிக்கை வெளியேறுபடி ஒட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கும் தொடரப்பட்ட நிலையில் குறித்த இடம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒதுக்கு இடம் என்பதும் குறிப்பிடதக்கது அவ்வாறு இருக்கும்போது எவ்வாறு அவர்களுக்கு காணி அனுமதி பத்திரம் வழங்க முடியும் இது தொடர்பாக மாவட்ட அரசியல் தலைவர்களோடு இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்
புல்மோட்டையில் பேரினவாதிகளால் மீண்டும் காணி கொள்ளைக்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்க திட்டமா ? புல்மோட்டையில் பேரினவாதிகளால் மீண்டும் காணி கொள்ளைக்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்க திட்டமா ? Reviewed by Madawala News on 10/09/2017 03:13:00 PM Rating: 5