Kidny

Kidny

பொத்துவிலில் பூரண ஹர்த்தாலும் கண்டன பேரணியும். (படங்கள்)

பொத்துவில் பிரதேசத்தில் நிலவுகின்ற பெருமளவான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்கக் கோரியும்
மெத்தனப்போக்கில் கண்மூடித்தனமாக இருக்கும் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கண்டித்தும் பொத்துவிலில்    நேற்று வெள்ளியன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மாபெரும் கண்டனப் பேரணியும் மேற்கொள்ளப்பட்டது.

பொத்துவிலில் கடந்த பல நாட்களாக தொடர்ச்சியாக பாடசாலைகளை பூட்டி எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. அந்த போராட்டங்களின் தொடர்ச்சியான ஓரங்கமாக தான் நேற்றைய ஹர்த்தாலும் கண்டன பேரணியும் நடாத்தப்பட்டது. அதுமட்டுமன்றி கடந்த சில நாட்களாக பாடசாலைகளுக்கு எந்த பிள்ளைகளையும் அனுப்பாது பெற்றோர்கள் தங்கள் எதிர்ப்பலைகளை பதிவு செய்து வருகிறார்கள்.

இதையொட்டி கடந்த 25.10.2017 அன்றும் கூட மாபெரும் கண்டன பேரணியொன்று நடாத்தப்பட்டது. தொடர்ந்தும் நிரந்தர தீர்வு கிடைக்காவிடில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் பெற்றோர்கள் சூளுரைத்துள்ளனர்.

இப்போதைய பொத்துவில் கல்வி கள நிலவரம் படுமோசமாக இருக்கின்றது. பொத்துவிலில் மொத்தம் 21 பாடசாலைகள் இருக்கின்றன.2016 கல்வி நிருவாக சுற்றுநிரூபத்தின் படி  பொத்துவிலுக்கு 460 ஆசிரியர்கள் தேவை. ஆனால் இருப்பதோ வெறும் 285 ஆசிரியர்கள். சுமார் 175 ஆசிரியர் பற்றாக்குறையோடு பொத்துவில் கோட்டம் தத்தளிக்கிறது. 175 ஆசிரியர்கள் இன்றி பொத்துவில் கோட்டம் இயங்குவதென்பது மிகுந்த வேதனையானது. அதுமட்டுமல்லாமல் ஏலவே பெருமளவு ஆசிரியர்கள் பற்றாக்குறையோடு இருக்கையில் ஒரே இரவில் இருக்கும் ஆசிரியர்களில் 39 பேரை இடமாற்றி அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை கோட்டங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆசிரியர்களின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அந்த ஆசிரியர்கள் இன்னும் வந்து கடமையேற்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பொத்துவில் கல்வி நிலையை சீர்படுத்தி மாணவர்கள் தடையின்றி கற்பதற்கு உதவ வேண்டும். இல்லாவிட்டால் இதைவிட மோசமான போராட்டங்களை எதிர்கொள்ள வரும் என சமூக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர்.

-சல்மான் லாபீர்-

பொத்துவிலில் பூரண ஹர்த்தாலும் கண்டன பேரணியும். (படங்கள்) பொத்துவிலில் பூரண ஹர்த்தாலும் கண்டன பேரணியும். (படங்கள்) Reviewed by Madawala News on 10/28/2017 11:27:00 AM Rating: 5