Kidny

Kidny

புலமைப் பரிசிலில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு குர்ஆன் கலாசாலையின் கெளரவிப்பு .



பிறைந்துரைச்சேனை தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலையின் ஏற்பாட்டில் நேற்று15.10.2017 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணியளவில்  கலாசாலையின் தலைவர் மெளலவி AUM.நளீம் (ஸலாமி,BA) அவர்களின் தலைமையில தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வொன்று இடம் பெற்றது.

அவர் தனது தலைமையுரையில் "தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலை இப்பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றது.அதன் தொடரிலேதான் இன்று எமது பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற மட்/பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயம்,மட்/பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான கெளரவிப்பு நிகழ்வு நடைபெறுகிறது" என்றார்.

"மேலும் இவ்வாறான மாணவர்களை எம் சமூகம் சார்ந்தவர்கள் கல்வி ரீதியான செயற்பாடுகளில் ஊக்கப்படுத்துகின்ற போது எதிர்காலத்தில் சிறந்த பண்பாடுள்ள கல்வி சமூகத்தை உருவாக்க முடியும்" என்று குறிப்பிட்டார்.

இக்கெளரவிப்பு நிகழ்வில் பிறைந்துரைச்சேனை முகைதீன் தைக்கா பள்ளிவாயல் தலைவர் சகோதரர் உசனார்,கிராம அபிவிருத்தி சங்க தலைவர் சகோதரர் ஆப்தீன்,மெளலவி அலியார் (அஸ்ஹரி),பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சகோதரர் நவாஸ்,தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலையின் முஅல்லிம்கள்,பிரதேச நலன்விரும்பிகள்,பெற்றோர்கள்,மாணவ மாணவிகளென ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கலந்து கொண்ட பிரமுகர்களினால் கருத்துரைகளும் இடம்பெற்றது.

தகவல்
AM.முஹம்மது நிஜாஸ்
புலமைப் பரிசிலில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு குர்ஆன் கலாசாலையின் கெளரவிப்பு .  புலமைப் பரிசிலில்  சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு  குர்ஆன் கலாசாலையின் கெளரவிப்பு . Reviewed by Madawala News on 10/16/2017 10:57:00 AM Rating: 5