Kidny

Kidny

கண்டி, மடவளை, ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த கலை நிகழ்ச்சி (“Radiant Stars 2017”)


கண்டி, மடவளை, ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின்
(ஹில்கன்ட்றி முன்பள்ளி கற்றல் நிலையம்)) வருடாந்த கலை நிகழ்ச்சியான
“Radiant Stars 2017” கடந்த 21/10/2017 சனிக்கிழமை அன்று மடவளை அஷ்ரப் கேட்போர் கூடத்தில் கல்லூரி அதிபர் ஜனாப் A.A.M. ஜாஸில் தலைமையின் கீழ் வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது.


இவ்விழாவில் பிரதம அதிதியாக மத்திய மாகாணத்திற்கான தொழிற்துறை, விளையாட்டு, பெண்கள் விவகாரம், கிராம அபிவிருத்தி, இளைஞர் விவகாரம், தொடர்பான அமைச்சர் கெளரவ திலின பண்டார தென்னகோன் கலந்து சிறப்பித்தார். மற்றும் விசேட அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் கெளரவ ஹிதாயத் சத்தார் அவர்களும் கலந்து சிறப்பித்தார்.


பிரதம அதிதி தனது உரையிலே  இவ்விழா இத்தனை சிறப்பாக இருக்கும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும் சாதாரன விழாவாகவே இருக்கும்  என தான் எண்ணி வந்ததாகவும் குறிப்பிட்டார். மேலும் மத்திய மாகாணத்திலே பல சர்வதேச பாடசாலைகளிற்கு விஜயம் செய்ததாகவும் அதிலே  எமது பாடசாலையே தரம் வாய்ந்த சிறந்த சர்வதேச பாடசாலையாக  விளங்குவதாகவும் தெரிவித்தார். மாகாண சபை உறுப்பினர் கெளரவ ஹிதாயத் சத்தார் அவர்கள் உரையாற்றும் போது தான் பல முறை இப்பாடசாலையின் பல நிகழ்ச்சிகளிற்கு சமூகமளித்திருப்பதாகவும் , அனைத்தும் தரம் வாய்ந்தவையாக இருப்பதை தான் அவதானித்ததாகவும் கூறினார். மற்றும் கல்லூரி அதிபர் தனது உரையிலே தமது முன்பள்ளியானது நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சிறார்களை உருவாக்கும் முற்றிலும் வேறுபட்ட கற்றல் செயற்பாடுகள் (AMI Montessori) நடைபெறும் ,கவர்ச்சிகரமான பாதுகாப்பான சூழலில் அமையப்பெற்ற தரம் வாய்ந்த முன்பள்ளியாகும் எனவும் , இங்கு 2 1/2 வயது முதல் 5 வயது வரை சிறுவர்கள்  கல்வி கற்பதாகவும் குறிப்பிட்டார். மேலும் முன்பள்ளிக் கல்வியில் திறமைமிக்க, அனுபவமுள்ள, பயிற்றுவிக்கப்பட்ட, ஆசிரியர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் நாடகம்,உரையாடல்,உரைகள்,கவிதைகள்,பொதுஅறிவுபோட்டி,நடனம் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன.இவை யாவும் மாணவச் சிறார்களின் திறமைகளை வெளிக்கொணரும் நிகழ்ச்சிகளாக அமைந்திருந்தன.

இவ்விழாவின் போது பிடிக்கப்பட்ட புகைபடங்கள் சில.
Media Unit
 HIS


Image may contain: 6 people, people smiling, people standing and outdoor
Image may contain: 11 people, crowd and indoor
Image may contain: 2 people, people standing
Image may contain: 3 people, people standing and suit
Image may contain: 4 people, people smiling
Image may contain: one or more people
Image may contain: 2 people, people on stage and people standing
Image may contain: one or more people and wedding
Image may contain: 2 people, people smiling
Image may contain: one or more people
Image may contain: 8 people, people on stage, people dancing and people standing
Image may contain: 5 people, people on stage, people sitting and shoes
Image may contain: 6 people, people on stage, people standing and child
Image may contain: 3 people, people on stage, people standing and people dancing
Image may contain: one or more people and people on stage

கண்டி, மடவளை, ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த கலை நிகழ்ச்சி (“Radiant Stars 2017”)  கண்டி, மடவளை, ஹில்கன்ட்றி சர்வதேச பாடசாலை முன்பள்ளி சிறார்களின் வருடாந்த கலை நிகழ்ச்சி (“Radiant Stars 2017”) Reviewed by Madawala News on 10/26/2017 10:22:00 PM Rating: 5