Kidny

Kidny

எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்றும். ஒட்டமாவடி மற்றும் ஏறாவூர் நகர சபை ஆட்சியை நாமே கைப்பற்றுவோம்.


வடக்கு, கிழக்கை இணைக்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து எதையும் எழுதிக் கொடுக்கவில்லை
எனவும்,முஸ்லிம்கள் மத்தியில் தேவையில்லாத பீதியை கிளப்ப வேண்டாமெனவும் முஸ்லிம் காங்கிரசின் தலை வரும் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

 காத் தான்குடியில் நேற்று(15) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான கலந் துரையாடலில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காத்தான்குடி கடற்கரையி லுள்ள பிஸ்மி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஒன்று கூடலில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் முஸ்லிம்களின் சம்மதில்லாமல் இணைப்பு சாத்தியமில்லை என்பது தமிழ் தலைமைகளுக்கும் தெரியும்.

வடக்கு கிழக்கு இணைப்பு அல்லது பிரிப்பு விடயத்தை வேண்டுமென்றே சிலர் அரசியல் மூலத னமாக பாவிக்கின்றனர்.

அரசியல் என்பது சாத்தியமானவற்றை சாதிக்கின்ற கலையாகும்.இதனை புரிந்து கொள்ள வேண்டும். வட கிழக்கு இணைப்பு தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. அது தமிழ் மக்களின் அபிலா சையாகும். முஸ்லிம் காங்கிரஸ் வட கிழக்கு இணைப்பு, பிரிப்பு பற்றி பெரிதாக அழற்றிக் கொள்ள வில்லை.

ஏனென்றால் நாங்கள் தமிழர்களின் அபிலாசைகளுக்கு குறுக்காக நிற்கின்றோம் என்பதாக காட்ட தேவையுமில்லை. சிங்களவர்களின் சில விடயங்களுக்கு கூஜா தூக்கிகளாக உள்ளதாகவும் பார்க் கத்தேவையில்லை.

 சிங்கள சமூகம் தமிழர்களுக்கு ஏதாவது செய்வதை தடுப்பதற்கு, நாங்கள் உடந்தையாக இருக்க வேண்டிய அவசிய முமில்லை. நாங்கள் நடு நிலையானவர்களாக இருந்து, மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு மாகாணம் இன்னொரு மாகா ணத்துடன் இணைவதானால் அந்த
மாகாணத்திலுள்ள மக்களின் அபிப் பிராயத்தை கேட்காமல் செய்ய முடியாது.

 அதே போன்று பாராளுமன்றத்தின் பெரும்பான்மை இல்லாமல் மாகாணங்களை இணைக்க முடியாது.

இது அரசியல் யாப்பிலேயுள்ள அடிப்படை அம்சம். இந்த சரத்து உள்ள நிலையில், இன்றைக்கு அல்லது நாளைக்கு வடக்கு, கிழக்கு இணையப்போவதாக பீதியையும், அச்சத்தையும் கிளப்ப தேவயில்லை.

வடக்கு, கிழக்கு இணைவதாக இருந்தால் முஸ்லிம்களுக்கு தனி மாகாணம் தர வேண்டுமென்பது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோரிக்கையும் கொள்கையுமாகும்.

சர்வதேசம் வடக்கையும், கிழக்கை யும் வலுக்கட்டாயமாக இணைத்து விட்டு முஸ்லிம்களை நட்டாற்றில் தள்ளி விடப்போவதாக இந்த விடயம் பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்றும்.

சில உள் ளூராட்சிமன்றங்களின் ஆட்சியை தீர்மானிக்கும். ஒட்டமாவடி பிரதேசசபை மற்றும் ஏறாவூர் நகர சபை ஆட்சியை நாமே கைப்பற்றுவோம்.

நமது ஒற்றுமையையும் , சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தி இந்த தேர்தலை வெற்றியடையச் செய்ய வேண்டும்.
எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்றும். ஒட்டமாவடி மற்றும் ஏறாவூர் நகர சபை ஆட்சியை நாமே கைப்பற்றுவோம். எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் பல உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை கைப்பற்றும். ஒட்டமாவடி மற்றும்  ஏறாவூர் நகர சபை ஆட்சியை நாமே கைப்பற்றுவோம். Reviewed by Madawala News on 10/16/2017 08:54:00 AM Rating: 5