Kidny

Kidny

மக்கள் தொகையை கட்டுப்படுத்த கருத்தடை முயற்சி.


பங்களாதேஷ் அகதி முகாம் களில் உள்ள ரொஹிங்கிய முஸ்லிம்களிடம் சுயவிருப் பத்தின் பேரில் கருத்தடையை
அமுல்படுத்த பங்களாதேஷ் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


மியன்மார் இராணுவத்தின் முற்றுகையிலிருந்தும், ரக்கைன் பகுதியில் அரங் கேறும் வன்முறை சம்பவங்களிலிருந்தும் தங்களது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இதுவரை 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளனர்.


ரொஹிங்கியா மக்களின் வருகை ஏற்கனவே 3 இலட்சத் திற்கும் அதிகமான ரொஹிங் கிய அகதிகளை கொண் டுள்ள பங்களாதேஷில், பல விதமான நெருக்கடிகளை ஏற் படுத்தியுள்ளது.

அத்துடன் ரொஹிங்கியா அகதிகளுக்கு உணவு, தண்ணீர், உறைவிடம், மருத்துவம் போன்ற அடிப்ப டைத் தேவைகள் கிடைப்பதிலேயே கடுமையான நெருக்கடி ஏற்படுத்தி   உள்ளது.

மியன்மாரின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ரொஹிங்கியா மக்கள் தவிர்க்கப்படுவதால், அவர்களின் குழந்தை பிறப்பு சதவீதம் குறித்து எவ்வித அதிகாரபுர்வ தகவல்களும் இல்லை.

அதே சமயம் முகாம்களில் உள்ள பல ரொஹிங் கிய அகதிகளுக்கு சராசரியாக மூன்று முதல் பத்துக் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது.

ரொஹிங்கிய அகதி முகாம் உள்ள பங்களாதேஷின் கொக்ஸ் பசார் மாவட்டத்தின்குடும்பகட்டுப்பாட்டு சேவை தலைவரான பின்டு கன்டிபட் டசர்ஜி கூறியதாவது,

"ராஹிங்கியாக்க ளுக்கு இடையே கருத்தடை குறித்து
மிக மிகக்குறைவான விழிப்பு ணர்வே உள்ளது. சிலர் 19 குழந்தைகள் பெற்றுள்ளனர், பலர் ரொஹிங்கிய ஆண்களும் ஒரு மனைவிக்கு மேல் வைத்துள்ளனர்" என்றார்.

இக்கட்டுப்பாடு நடவடிக்கை யில் பணியாற்றும் பர்ஹானா சுல்தானா,
 "நான் முகாம்களில் உள்ள பல ரொஹிங்கியா பெண் களிடம் பேசி இருக்கிறேன். ஆனால் அவர்களில் பலர் கருத் தடை என்பது பெரும் பாவமா கவே கருதுகிறார்கள்" என்றார்.

முகாம்களில் பணியாற்றக் கூடிய மனித உரிமை செயற் பாட்டாளர்கள், "பல பெண்கள் கற்பம் தரிப்பதை அவர்கள் வாழ்ந்த பகுதியில் நடக்கும் கற்பழிப்புகள் மற்றும் இராணுவ வன்முறைகளிலிருந்து தற்காததுக் கொள்ளும் நடவடிக்கை யாக கருதுகிறார்கள்."

ரொஹிங்கியா பெண்கள்மீதுமியன்மார்இராணுவம் பாலியல் ரீதியான வன்முறைகளைத் தொடர்ந்து நிகழ்த்துவதாக ஐ.நா உள் ளிட்ட பல்வேறு சர்வதேச அமைப்பு கள் குற்றம்சாட்டியுள்ளமை குறிப்பி டத்தக்கது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்த கருத்தடை முயற்சி. மக்கள் தொகையை கட்டுப்படுத்த கருத்தடை முயற்சி. Reviewed by Madawala News on 10/30/2017 09:15:00 AM Rating: 5