Ad Space Available here

நேற்றைய பல இலட்ச நகை கொள்ளை.. நான்கு இளைஞர்கள், காத்தான்குடி பொலிஸாரினால் கைது .


மட்டக்களப்பு, கல்லடி பாலத்துக்கருகில், வீடொன்றிலிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கல்லடி, புதிய டச்பார் வீதியிலுள்ள நகை உற்பத்தியாளர் ஒருவரின் வீட்டிலேயே இந்த கொள்ளைச்சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு, சாமி அறையில் இருந்த நகை பாதுகாப்பு பெட்டகம் மற்றும் நகை உற்பத்தி நிலையத்தில் இருந்த அலுமாரியும் உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளது.

சுமார் 68 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய சுமார் 1000 கிராம் நகைகள் பாதுகாப்பு பெட்டியுடன் கொள்ளையிடப்பட்டுள்ளதாக, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டினுள் மிளகாய் தூளை தூவிவிட்டு, இந்தக் கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் வீட்டில் நகை தொழில் செய்யும் நான்கு இளைஞர்கள், காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடிப் பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
நேற்றைய பல இலட்ச நகை கொள்ளை.. நான்கு இளைஞர்கள், காத்தான்குடி பொலிஸாரினால் கைது . நேற்றைய பல இலட்ச நகை கொள்ளை.. நான்கு இளைஞர்கள், காத்தான்குடி பொலிஸாரினால் கைது . Reviewed by Madawala News on 10/07/2017 12:41:00 PM Rating: 5