Kidny

Kidny

அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம்.. எமக்கு செய்யப்பட்ட துரோகம்.

ரோகின்ய முஸ்லிம்களுக்காக கவலைப்படும் எம் உள்ளங்கள் . அவர்களுக்கு இவ் நிலை வர காரணம் என்ன
என்பது பற்றி சிந்திக்க கடமைபட்டு இருக்கிறோம் என்பதை உணர மறந்து விட்டோம்.

ரோஹான்ய முஸ்லிம்கள் பர்மாவில் சிறுபான்மையினரே.. வரலாற்றை ஆராயும் போது முன்பொரு காலத்தில் பர்மாவின் செல்வந்த வாழ்க்கைக்கு உரித்தாணவர்கள்.

ஆனால் கால ஓட்டத்தில் அவர்களுக்கான அரசியல் துரோகம் ஆரம்பமாகும் போதுதான் அனைத்து அந்தஸ்தயும் இழந்து அநாதைகளாக இன்று கொன்று குவிக்கின்றனர் இனவாதிகள். 

அங்கு இன்று ரோஹின்யர்களுக்கு குடியுரிமை கிடையாது, ஐ.டி.டி. தேசிய அடையாளம் கிடையாது, பிறப்பு சான்றிதல் கிடையாது , அரச தொழில் கிடையாது, அரச சலுகை, ரேசன் , நிவாரனம் கிடையாது, எந்த நிலம் சொத்தும் வைத்திருக்கும் உரிமை(உறுதி) கிடையாது , எத்தணை பேர் கொள்ளப்பட்டனர் என்பதனை கணக்கு எடுப்பதற்கு இறப்பு பதிவு கூட கிடையாது. இவ்வளவு உரிமையும் பரிபோனதற்கு ஒரே காரணம் தத் தமது பிரச்சிணைகளை எடுத்து வழி நடத்த இருந்த அரசியல் உரிமையை இழந்ததே.. 

அங்கும் ரோஹின்ய அரசியல் வாதிகள் இனவாதிகளிடம் அரசியல் அந்தஸ்த்தை இழந்தது அவர்கள் அழிவை தீர்மானித்தது. 

பர்மாவில்  எப்படி அரசியல் உரிமை முஸ்லிம்களுக்கு எதிராக தகர்க்கப்பட்டதோ.. அதே போன்று எமக்கெதிராக இலங்கையில் அரசியல் திருத்தச்சட்டம் மாற்றப்பட்டது.

அதற்கு பார பட்சம் இல்லாமல் எமது அரசியல் தலமைகள் அனைத்தும் கையளுத்திட்டு வரலாற்று துரோகத்தை செய்து விட்டனர்.

சிலர் மிரட்டலுக்கும், சிலர் பணத்திற்காகவும் ஒட்டு மொத்த முஸ்லிம்களின் கழுத்தில் கத்திவைக்க எமது அரசியல் தகமைகள் இடமளித்துவிட்டனர். 

இது முதல் அடிதான் முஸ்லிம்களுக்கு.., காலப்பேக்கில் எந்த உரிமையும் அற்றவர்களாக்க இந்த நடவடிக்கை போதுமானது. எந்த மாகாண சபையும் இனி முஸ்லிம்களின் உரிமைக்கு பேசாது... ஏன் எனில் துரோகிகளும்  எதிரிகளுமே முஸ்லிம்களை அழப்போகின்றனர்... 
விளிப்புடன் எம் அரசியல் வாதிகளிடம் கேள்வி  கேலுங்கள்.. 

அனைத்து துரோகிகளுக்கும் இது சமர்பபனம்.

செம்மண்ஒடை சலீம்
அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம்.. எமக்கு செய்யப்பட்ட துரோகம். அரசியல் அமைப்பு திருத்தச்சட்டம்.. எமக்கு செய்யப்பட்ட துரோகம். Reviewed by Madawala News on 10/18/2017 01:59:00 PM Rating: 5