Kidny

Kidny

தற்கொலைக்கு எதிரான தன்னம்பிக்கை பயிற்சியாளர் சனா இக்பால் விபத்தில் உயிரிழப்பு.. கணவர் நதீம் மீது தாய் குற்றச்சாட்டு.


தன்னம்பிக்கை பயிற்சியாளர் சனா இக்பால்  ஹைதராபாத்தில் நேற்று நடந்த மோசமான கார் விபத்து ஒன்றில்
மரணமடைந்தார்.

சனா இக்பால் தற்கொலைக்கு எதிராக இந்தியா  முழுவதும் பயணம் செய்து பிரச்சாரம் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் சனா இக்பால். இந்திய அளவில் பிரபலமான தன்னம்பிக்கை பயிற்சியாளரான இவர் தற்கொலைகளுக்கு எதிரானவர்.

இந்தியா முழுவதும் தற்கொலைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வந்தார். இதற்காக இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பயணம் செய்ய முடிவு செய்திருந்தார். இதற்காக இவர் இந்தியா முழுவதும் மோட்டார் சைக்கிளிலேயே பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல இடங்களுக்கு சென்று இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் என பலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். இவர் சமயங்களில் அவரது கணவர் அப்துல் நதீம் உடன் பயணம் செய்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை சனா இக்பால் அவரது கணவர் அப்துல் நதீம் உடன் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். ஹைதராபாத் புறநகர் நரசிங்கி என்ற பகுதியில் இவர்கள் கார் சென்று கொண்டிருந்தது.

சனா இக்பாலின் கணவர் அப்துல் நதீம் காரை ஓட்டி சென்றார். இந்த நிலையில அவர்கள் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து லாங்கர் நெடுஞ்சாலை அருகே சாலை தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இடதுபுறம்தான் கார் மோதியது. அந்த பக்கம்தான் சனா அமர்ந்திருந்ததால் படுகாயமடைந்தார்.

இந்த மோசமான விபத்து காரணமாக சனா இக்பால் சம்பவ இடத்திலேயே இறந்தார். அப்துல் நதீம் மோசமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார். இதுகுறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், சனா இக்பால் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் கூறினாலும், இது ஒரு கொலை என்று அவரது குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.

ஹைதராபாத் புற நகர் பகுதியில் கணவருடன் நேற்று அதிகாலை காரில்

கணவர் காயங்களோடு சிகிச்சை பெறுவதாகவும் போலீசார் தெரிிவித்தனர். விபத்து நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

சானாவின் தாயாரும், வழக்கறிஞருமான சஹீன் கான் கூறுகையில், சனாவின் திருமண வாழ்க்கை தொடர்ந்து தொல்லைக்குள்ளாகவே இருந்தது. ஆரம்பம் முதலே சானா மகிழ்ச்சியாக இல்லை.

குறுகிய காலமே கணவரோடு சானா வாழ்ந்தார். பிறகு, எங்கள் வீட்டில்தான் சானா வசித்தார். ஒருவரும் சானா மீது அக்கறை காட்டவில்லை. சானாவின் வாழ்க்கையில் தினமும் வேதனைதான்.

சனிக்கிழமை கூட, இந்த நரகத்திலிருந்து தன்னை மீட்குமாறு சானா என்னிடம் தெரிவித்தார். ஆனால், நான் சென்னை சென்று கொண்டிருந்ததால், திரும்பி வந்ததும், சரி செய்கிறேன் என்று தெரிவித்திருந்தேன்.

நான் சென்னை சென்ற நேரத்திற்குள்ளாக இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது. விபத்து போல ஜோடிக்கப்பட்டு கொலை அரங்கேற்றப்பட்டுள்ளது. காவல்துறை இதில் தக்க விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தற்கொலைக்கு எதிரான தன்னம்பிக்கை பயிற்சியாளர் சனா இக்பால் விபத்தில் உயிரிழப்பு.. கணவர் நதீம் மீது தாய் குற்றச்சாட்டு. தற்கொலைக்கு எதிரான  தன்னம்பிக்கை பயிற்சியாளர் சனா இக்பால் விபத்தில் உயிரிழப்பு.. கணவர் நதீம் மீது தாய்  குற்றச்சாட்டு. Reviewed by Madawala News on 10/25/2017 01:50:00 PM Rating: 5